சிவில், சமூகம், சமாதான, நீதிக்கான சர்வதேச சட்டத்தை இலங்கை உள்ளிட்ட 71 நாடுகள் வலியுறுத்தல்

Published By: Priyatharshan

26 Mar, 2018 | 02:28 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

117 நகரங்களை சேர்ந்த சிவில் சமூக மத குருக்கள் சமாதானம் மற்றும் சமாதான எதிர்ப்பு நடவடிக்கை களைவு என்பவற்றிற்கு முற்றுமுழுதாக ஒத்துழைப்பை பரிந்துரைத்துள்ளது.

தென்கொரியாவில் இடம்பெற்ற சமாதான ஒலிம்பிக்கை தொடர்ந்து வட கொரியா - அமெரிக்க பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட வரலாற்று தீர்மானத்தையிட்டு உலகளாவிய சமூகம் ஆர்வத்துடன் தமது உற்சாகத்தை தெரிவித்து வருகின்றன. 

சமாதான பிரகடனம் மற்றும் போர் இடைநிறுத்தம் குறித்த இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வை கொரியாவை தளமாக கொண்ட சர்வதேச சமாதான அரசசார்பற்ற நிறுவனம் மார்ச் 14 இல் ஏற்பாடு செய்தது.

உலக சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நீதியை உய்த்தறிவதற்கான அழைப்பு எனும் கருதுகோளில் வழக்குகளுக்குரிய நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. 

போர் சம்பந்தமான நடவடிக்கைகள் தவிர்த்தல், சமாதானத்தை எட்டல், சர்வதேச சட்டத்தை மதித்தல், இன, மத ஒற்றுமை மற்றும் சமாதான கலாசாரம் என்பவற்றை சர்வதேச சட்ட நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது.

உலகளாவிய சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் உலகளாவிய சமாதானத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு கொண்டவர் என எச்.டபிள்யூ.பி.எல். தலைவர் மான் ஹீலி சுட்டிக்காட்டினார்.

சமாதானம் வரும் என எதிர்வு கூறாமல் யுத்தத்திற்கு நாங்கள் முடிவு கட்ட வேண்டும் எனவும் இவ்வுலகையும் உலக மனிதாபிமானத்தையும் எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டும் என பங்கேற்றோரிடம் அவ் வேண்டுகோள் விடுத்தார்.

போரினால் பலி எடுக்கப்பட்ட உயிர்களுக்கு இழப்பீடு வழங்க இன்றைய சட்டத்தினால் முடியாது உள்ளது.

மனித வாழ்வை பாதுகாக்கும் உபகரணமும் யுத்தத்தை தடுக்கும் ஆற்றலுள்ள சட்டமுமே எமக்கு தேவையாக உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களிடம் இருந்து இப்புவியில் மனித இனமோ விலங்குகளோ தப்பிப் பிழைக்க முடியாது. 

மனித சமூகத்திற்கும் சொத்துக்களுக்கும் சிறு தவறோ அல்லது விபத்தோ மீளப் பெற முடியாத அளவிற்கு பாரிய சேதத்தை உண்டுபண்ணக் கூடும். சமாதானத்தின் தூதுவராக 365 நாட்களும் 24 மணி நேரமும் நாம் அனைவரும் சமாதானத்தை பேண உழைக்க வேண்டும் என டி.பி.சி.டபிள்யூவை உருவாக்கும் போது பங்கேற்ற இந்திய சட்டத்தரணிகள் சங்க தலைவர் பிரவீன் எச். பராஹ் தெரிவித்தார்.

நாம் எல்லோரும் எதிர்பார்ப்பதை போன்று டி.பி.சி.டபிள்யூ. ஒரு சமாதான சமூகத்திற்கான ஒரு சிறந்த ஆரம்பமாகும். சமாதான சமூகத்தில் மட்டும் இடம் பெறக்கூடிய வாழ்விற்கான மற்றும் தெய்வீக வளர்ச்சிக்கான உரிமை ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ளது. நாட்டின் தலைவர் அதனது முக்கியத்துவத்திற்கு உடன்படுவாராக இருந்தால் நாங்கள் தீர்மானத்தின் விழிப்புணர்வு அவசியம் மற்றும் அமுலாக்கத்தை அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ள முடியும் என டெல்லி ஆயுர்வேத எக்ஸ்போ இயக்குநர் ஸ்ரீ விதுர்பிரியா தாஸ் தெரிவித்தார்.

சமாதானத்தை கட்டியெழுப்பி யுத்தத்திற்கு நாங்கள் முடிவு கட்ட வேண்டும் என்றால் நாட்டின் எல்லை, இனம், மதம் எனும் வேறுபாட்டை கடந்து ஒருமித்து செயலாற்ற வேண்டும். ஐ.நா.வின் தீர்மானமாக டி.பி.சி.டபிள்யூவை ஏற்று சர்வதேச முரண்பாடுகளுக்கு தீர்வுகாண நாம் சிந்தித்து செயலாற்றவேண்டும். எச்.ட.பிள்யூ.பி.எல். முன்வைத்த சமாதான கல்விக்கு சர்வதேச சமூகம் உதவ முன்வர வேண்டும் என சர்வதேச சட்ட சங்கத்தின் கொரியா கிளையின் முன்னாள் தலைவர் டியோக் கியூ லிம் குறிப்பிட்டார்.

தென்கொரியா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஜேர்மனி, யுக்ரேன், பிரிட்டன் மற்றும் சீனா உட்பட்ட 71 நாடுகளில் 166 நகர்களில் பல நாடுகள் பங்கேற்ற நிகழ்வான 2 ஆவது வருடாந்த டி.பி.சி.டபிள்யூ. நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 

சர்வதேச நிகழ்வான இதில் 150000 குடிமக்கள் மற்றும் தலைவர்கள் பல பிரிவுகளில் இருந்து பங்கேற்றனர். இந்த நிகழ்வு சமாதானத்தை உய்த்தறிதல், சிறந்த சமூக சமாதானத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கலைத்தல் என்பவற்றை தூண்டுவதாக அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44