யாழ்.மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யாழ். மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதன்போது, தலைவர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. முதலாம் வாக்கெடுப்பில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்டுக்கு 18 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் முடியப்பு ரெமீடியஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் விஷ்வலிங்கம் மணிவண்ணன் ஆகிய இருவருக்கும் தலா 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனை அடுத்து வாக்கெடுப்பு இன்றி இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் யாழ்ப்பாண மாநகர துணை முதல்வராக துரைராசா ஈசன் தெரிவாகியுள்ளார்.