தெற்­கா­சிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் இம்­முறை இலங்­கையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

அந்த வகையில் மூன்­றா­வது தெற்­கா­சிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் தொடர் எதிர்­வரும் மே மாதம் 5 மற்றும் 6ஆம் திக­தி­களில் கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்­ள­தாக இலங்கை மெய்­வல்­லுநர் சம்­மே­ளனம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

தெற்­கா­சிய கனிஷ்ட விளை­யாட்டுப் போட்­டிகள் கடந்த 2007ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக இலங்­கையில் நடத்­தப்­பட்­டன. 

அத­னை­ய­டுத்து இறு­தி­யாக 2013ஆம் ஆண்டு இந்­தி­யாவின் ராஞ்­சி­யிலும் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னை­ய­டுத்து போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான வாய்ப்பு இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட போதிலும் நிதிப்­பற்­றாக்­குறை, போதிய மைதான வச­திகள் காணப்­ப­டாமை உள்­ளிட்ட கார­ணங்­களால் அத் தொடரை நடத்த முடி­யாமல் போனது.

எனினும், கடந்த வருடம் குறித்த போட்டித் தொடரை இந்­தி­யாவில் நடத்­து­வ­தற்கு தெற்­கா­சிய ஒலிம்பிக் சம்­மே­ளனம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்த போதிலும் பல்­வேறு கார­ணங்­களால் இந்­தியா விலகிக் கொண்­டது.

இந்­நி­லையில், சுமார் 4 வரு­டங்­க­ளாக நடை­பெ­றாமல் இழு­பறி நிலையில் இருந்த தெற்­கா­சிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் தொடர் எதிர்­வரும் மே மாதம் 5 மற்றும் 6 ஆம் திக­தி­களில் சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பா டுகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.