(ஆர்.யசி)

நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள  அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்து வருகின்றமை அரசாங்கத்திற்கு  கிடைத்த வெற்றியாகும். எனினும் தீர்வுகள் குறித்து இணைந்து பயணிக்கும் செயற்பாட்டில் அனாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. எஞ்சியுள்ள காலத்திலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் எனவும் அரச தரப்பு கூறுகின்றது. 

நல்லிணக்கத்தை நடைமுறைபடுத்தும் செயற்பாட்டில் அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கண்டித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்தை கடுமையாக சாடி வருகினது. இந்நிலையில் அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை கையாளவுள்ளது என வினவிய போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன  இதனைக் குறிப்பிட்டார்.