காதலர் தினத்­தை­யொட்டி வெள்ளை ரோஜா தோட்­டம்

Published By: Raam

15 Feb, 2016 | 10:14 AM
image

ஹொங்­கொங்கில் காதலர் தினத்­தை­யொட்டி எல்.ஈ.டி. ஒளியூட்­டப்­பட்ட 5,000 செயற்கை வெள்ளை நிற ரோஜாக்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சென்ரல் புரோ­மெனட் மற்றும் தமார் பிராந்­தி­யங்­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த ரோஜாக்­களை பார்­வை­யிட பெருந்தொகை­யான காத­லர்கள் வருகை தருவதாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி செயற்கை ரோஜாத் தோட்­டத்தை காட்சிப்படுத்தியுள்ள பன்கொம் நிறு­வனம் ஒவ்­வொரு வரு­டமும் வெவ்­வேறு பிராந்­தி­யங்­களில் இந்த ரோஜா தோட்­டத்தைக் காட்­சிப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது.

முதன்­மு­த­லாக இந்த ரோஜா தோட்டம் 2014 ஆம் ஆண்டில் தென் கொரிய நகரான சியோலில் காட்சிப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right