ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியிலும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் கையெழுத்திப் பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற இக்கையெழுத்துச் சமரில் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் ஆர்வதுடன் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டனர்.

இவ்வாறு மக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களைத் திரட்டி உரிய கோரிக்கை அடங்கிய கடித்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.