மாதம்பே குளியாப்பிட்டிய பகுதியில் உடுபத்தாவ - தும்மலசூரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for கோர விபத்து

இளைஞர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 18 வயது மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள்  உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்தானது நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.