மர­ணிப்­ப­தற்கு முன் இறு­தி­யாக மனித மனது என்ன சிந்­திக்கும் என்ற ஆய்வில், மர­ணத்தை எதிர்­கா­லத்தில் தவிர்க்­க­மு­டியும் என்று நம்­பிக்கையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இதைப் பற்றி யாரும் துல்­லி­ய­மாக சொல்­லி­விட முடி­யாது. 

விஞ்­ஞா­னி­களால் இது தொடர்­பான சில தக­வல்­களை சொல்ல முடியும் என்­றாலும், இந்த கேள்­விக்­கான பதில் பிரம்ம இரக­சி­ய­மா­கவே உள்­ளது.

இருந்­தாலும், விஞ்­ஞா­னி­களும் இது­போன்ற சிக்­க­லான புதிர் நிறைந்த கேள்­வி­க­ளுக்­கான பதிலைத் தேடும் முயற்­சி­களில் தொடர் ஆராய்ச்­சி­களை செய்து வரு­கின்­றனர்.

அண்­மையில் மரணம் தொடர்­பாக சில விஞ்­ஞா­னிகள் மேற்­கொண்ட ஆய்­வுகள் ஆச்­ச­ரி­ய­மான முடி­வு­களை தந்­துள்­ளன. இந்த ஆய்­வு­களில் நரம்­பியல் தொடர்­பான சுவா­ரஷ்­ய­மான தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

பெர்லின் சாரிட் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் ஓஹி­யோவில் உள்ள சின்­சி­னாட்டி பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னிகள், ஜென்ஸ் ட்ரேயரின் தலை­மையின் கீழ் இந்த ஆய்வை மேற்­கொண்­டனர்.

இந்த ஆய்­வுக்­காக, சில நோயா­ளி­களின் குடும்­பத்­தி­னரின் முன்­ன­னு­ம­தியை பெற்று, நோயா­ளி­களின் நரம்பு மண்­ட­லத்தை விஞ்­ஞா­னிகள் நெருக்­க­மாக கண்­கா­ணித்­தார்கள்.

வீதி விபத்­து­களில் படு­மோ­ச­மாக காய­ம­டைந்­த­வர்கள், பக்­க­வாதம் மற்றும் இதய செய­லி­ழப்பால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­ப­வர்­களை விஞ்­ஞா­னிகள் இந்த ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுத்­தி­னார்கள்.

மர­ணிக்கும் நேரத்தில் மனி­தர்­களின் மூளையும், விலங்கின் மூளையும் ஒன்­று போல் செயல்­ப­டு­வ­தாக விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­தனர். 

மேலும், மூளையை 'ஏறத்­தாழ'மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புகள் இருப்­ப­தா­கவும் விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.

மர­ணத்தின் இறுதிக் கட்­டத்தில் மூளையில் ஏற்­படும் மாற்­றங்­களை கண்­கா­ணிப்­ப­தோடு, மர­ணத்தின் இறுதித் தரு­ணத்தில் இருக்கும் மனி­தனை எப்­படி காப்­பாற்­றலாம் என்­பதும் இந்த ஆய்வின் முக்­கி­ய­மான நோக்­கங்­க­ளாக இருந்­தன.

இந்த ஆய்வை விஞ்­ஞா­னிகள் மேற்­கொள்­வ­தற்கு முன்னர், 'மூளை மரணம்' பற்றி நாம் அறிந்­தி­ருக்கும் செய்­திகள் பெரும்­பாலும் விலங்­கு­களின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­க­ளி­லி­ருந்து தெரிந்து கொண்­டவை என்­ப­தையும் இங்கு குறிப்­பி­ட­வேண்டும்.

மரணம் பற்றி நாம் ஏற்­க­னவே 

அறிந்­தவை:

உடலின் இரத்த ஓட்டம் நின்­றுபோய், மூளைக்கு ஒட்­சிசன் செல்­வது குறையும்.

இந்த நிலையில், பெரு­மூ­ளைச்­சி­ரையில் இரத்த ஓட்டம் குறை­வதால் (cerebrovascular ischemia), மூளையில் இர­சா­யன மாறு­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றன. மேலும் மூளையின் 'மின் செயல்­பாடு' (Electrical activity ) முற்­றி­லு­மாக நின்­று­போய்­விடும்.

மூளை அமை­தி­ய­டையும் நடை­மு­றைக்கு காரணம், ஆற்றல் தேவைக்­கான பசி­யுடன் இருக்கும் நரம்­புகள், தங்­க­ளுக்கு தேவை­யான ஆற்­றலைப் பெற்­றாலும், மரணம் நெருங்­கு­வதால் அந்த ஆற்றல் பயன்­ப­டு­வ­தில்லை என்று நம்­பப்­ப­டு­கி­றது.

அனைத்து முக்­கிய அய­னி­களும், மூளை செல்­க­ளிடம் இருந்து பிரிந்­து­வி­டு­கின்­றன. இதனால் அடி­னோசின் டிரைஃ­பாஸ்பேட் கிடைப்­பது பல­வீ­ன­மா­கி­றது. இது ஒரு சிக்­க­லான கரிம வேதி­யியல் ஆகும். உடல் முழு­வ­திலும் ஆற்­றலை சேமித்து வைப்­பதும், ஒரு இடத்­தி­லி­ருந்து இன்­னொரு இடத்­திற்கு எடுத்துச் செல்­வதும் இதன் வேலை.

இதற்கு பிறகு திசுக்­களை மீட்­டெ­டுப்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கி­விடும்.

மனி­தர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட ஆராய்ச்சி

ஜென்ஸ் ட்ரேயர் தலை­மை­யி­லான விஞ்­ஞா­னி­களின் குழு மனி­தர்­களைப் பொறுத்­த­வரை இந்த செயல்­மு­றையை இன்னும் ஆழ­மாக புரிந்து கொள்ள விரும்­பி­யது. அதனால் சில நோயா­ளி­களின் மூளை­களின் நரம்­பியல் நட­வ­டிக்­கைகள் கண்­கா­ணிக்­கப்­பட்­டன.

மின்­மு­னையக் கீற்­று­களை (Electrode strips) பயன்­ப­டுத்தி இந்த நோயா­ளி­களை மயக்க நிலையில் இருந்து மீட்­டெ­டுக்க முயற்சி செய்­யக்­கூ­டாது என்று மருத்­து­வர்கள் அறி­வு­றுத்­தி­னார்கள்.

ஒன்­பது நோயா­ளி­களில் எட்டு பேரு­டைய மூளையின் அணுக்கள், மர­ணத்தை தவிர்க்க முயற்­சிப்­பதை விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­தனர். மூளையின் அணுக்­களும், நரம்­ப­ணுக்­களும் இதயத் துடிப்பு நின்ற பிற­கும்­கூட வேலை செய்­ததை அவர்கள் கண்­ட­றிந்­தனர்.

மக்கள் ஏன் 'வாயு'வை வெளி­யேற்­று­கி­றார்கள்? அதை தடுக்க முடி­யுமா?

ஆரோக்­கி­ய­மான உட­லுக்கு உத்­த­ர­வாதம் தரும் உண­வுகள் எவை?

புற்­றுநோய் எதனால் உண்­டா­கி­றது? எவ்­வாறு தவிர்ப்­பது?

மனி­தர்­களின் நரம்பு மண்­ட­லத்தின் பிர­தா­ன­மா­னது மனித மூளை. அது­மட்­டு­மல்ல, மனித உறுப்­பு­களில் சிக்­க­லா­னதும் மூளை என்­பதும் நமக்கு தெரிந்­ததே. உடலின் இயல்­பான செயற்­பா­டு­க­ளான மூச்­சு­வி­டுதல், செரி­மானம், இத­யத்­து­டிப்பு, கொட்­டாவி போன்ற தன்­னிச்­சை­யான செயற்­பா­டு­களை மேற்­கொள்ளும்.

அதேபோல், விழிப்­பு­ணர்­வுடன் நிகழும் சிந்­தனை, புரிதல், திட்­ட­மி­டுதல் போன்ற செயற்­பா­டு­க­ளையும் மனித மூளைதான் கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. மற்ற எல்லா உயிர்­க­ளையும் விட இத்­த­கைய சிக்­க­லான உயர்­நிலை செயற்­பா­டு­களைச் சிறப்­பாக கையாளும் திறனை மனித மூளை பெற்­றி­ருக்­கி­றது.

உணர்வு உறுப்­பு­க­ளுக்கும் செயல்­படும் உறுப்­பு­க­ளுக்கும் இடையே மின்­வே­தியல் மாற்­றங்கள் மூலம் தூண்­டல்­களைக் கடத்தும் பணியை செய்­வது நரம்­ப­ணுக்கள் (நியூ­.ேரான்கள்). இந்த மின்­வே­தியல் மாற்­றங்கள் நரம்­ப­ணுக்­களின் உள்ளும் புறமும் நடை­பெறும் சோடியம் மற்றும் பொட்­டா­சியம் அய­னி­களின் இடம்­பெ­யர்வால் நிகழ்­கி­ன்றன. 

விஞ்­ஞா­னி­களின் கூற்­றுப்­படி, மின்­வே­தியல் சம­நி­லையை பரா­ம­ரிப்­பது ஒரு தொடர் முயற்­சி­யாகும்.

 உடலின் அணுக்கள் மின்­வே­தியல் சம­நி­லையை பரா­ம­ரிக்க இரத்த ஓட்­டத்தைப் பயன்­ப­டுத்­து­கின்­றன, மேலும் இதி­லி­ருந்தே ஒட்சிசன் மற்றும் இரசா­யன ஆற்­ற­லையும் எடுத்­துக்­கொள்­கின்­றன.

விஞ்­ஞா­னி­களின் கூற்­றுப்­படி, உடல் இறக்கும் போது, மூளையின் இரத்த ஓட்டம் நிறுத்­தப்­படும். அந்த சம­யத்தில் செய­லி­ழந்த நரம்­புகள் தனது ஆற்­றலை தக்க வைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றன.

மூளை ஆராய்ச்­சியில் ஆச்­ச­ரி­யப்

­ப­டுத்தும் புதிய கண்­டு­பி­டிப்­புகள்

டைய­பு­லி­மியா - உலகின் மிகவும் அபா­ய­க­ர­மான நோய்

இது மெது­வாக பர­வு­வ­தற்கு பதில் மூளையில் ஒரே சம­யத்தில் நடை­பெ­று­வதால், இதை 'தவிர்க்க முடி­யாத மூளை அழுத்தம்' என்று கூறு­கின்­றனர். இந்த நிலை ஏற்­ப­டுத்தும் விளைவை எளி­தாக  புரிந்து கொள்­வ­தற்­காக, சுனா­மி­யுடன் ஒப்­பிட்டு, 'பெரு­மூளை சுனாமி' என்றும் அழைக்­கின்­றனர்.

மின்­வே­தியல் சம­நிலை மாறு­ப­டு­வதால் மூளையில் உள்ள அணுக்கள் அழிக்­கப்­ப­டும்­போது, உடலில் இருந்து அதிக அள­வி­லான வெப்ப ஆற்றல் வெளி­யா­கி­றது. 

இதன்­பி­றகு மனித உடல் மர­ணிக்­கி­றது.

'மர­ண­மற்ற பெரு­வாழ்வு'

ஆனால், இந்த ஆய்­வின்­படி, இன்று மரணம் என்­பது தவிர்க்க முடி­யா­தது என்ற நிதர்­ச­ன­மான உண்மை, எதிர்­கா­லத்தில் மாறக்­கூடும் என்­பது ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. அப்­போது 'மர­ண­மற்ற பெரு­வாழ்வு' வாழும் சூழ்­நி­லையும் உரு­வா­கலாம்.

ஜென்ஸ் ட்ரேயர் இவ்­வாறு கூறு­கிறார்: "சோடியம் அய­னி­களின் ஊடு­ரு­வலால், நரம்பு மண்­ட­லத்தின் பிளாஸ்மா சவ்வின் உள்­ளேயும் வெளி­யேயும் இடையே ஏற்­படும் ஆற்றல் வேறு­பாட்டால் ஏற்­படும் இழப்பு, அணுக்­களின் உரு­மாற்­றத்தை தொடங்­கு­கி­றது. ஆனால் இது மரணம் அல்ல. ஏனெனில் மீண்டும் உடலில் மின்முனைவை அளித்து, அதை மீட்டெடுக்க முடியும். இதனால் மரணத்தில் இருந்து மனிதனை மீட்டெடுத்து, இறப்பை தவிர்க்க முடியும்."

எனினும், இறப்பை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான ஆராய்ச்சியும், மரணத்தை போன்றே சிக்கலானது என்று கூறுகிறார் ஜென்ஸ் ட்ரேயர். அதாவது, மரணம் தொடர்புடைய கேள்விகளுக்கு பதில் கிடைப்பதும் எளிதானதில்லை.ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்ற பழமொழியை காலம் நிரூபித்து வருவதைப் போன்றே, மரணம் என்ற ஒன்றும் மனிதனுக்கு இல்லை என்ற புதுமொழியை உருவாக்க ஆராய்ச்சிகள் தொடரும். இந்த ஆராய்ச்சி மனிதனின் மரணத்தை மரணிக்கச் செய்யும் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.