எகிப்தில் அலெக்ஸான்டிரியா நகர பொலிஸ் உயரதிகாரியை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

எகிப்து நாட்டின் அலெக்ஸான்டிரியா நகர பாதுகாப்புத்துறை உயரதிகாரியாகவும், பொலிஸ் மேஜர் ஜெனரலுமான மொஸ்தபா அல்-நேம்ர் இன்று தனது பாதுக்காப்பு அதிகாரிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது வீதியோரம் நின்றிருந்த ஒரு காரில் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் பொலிஸ் உயரதிகாரியும் கார் சாரதியும்  உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 

மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள்  படுகாயம் அடைந்துள்ளனர் என எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இன்னும் இரு நாட்களில் எகிப்தில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தால் அலெக்ஸான்டிரியா நகர மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.