பெற்றோல்  விலை அதிகரிப்பது தொடர்பில் எதுவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலபத்தை மாத்திரம் நோக்கமாக கொண்டு தீர்மானம் எடுக்கும் நிறுவனமல்ல என்று அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்று  நள்ளிரவு முதல் 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 9 ரூபாவாலும், டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.