வீரகேசரி நாளிதழுடன் வெளியான சிறப்பு இதழில் (Sparkling Christmas Shopping Guide) உள்ள Ranomoto பற்றிய ஆக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை எழுதி குலுக்கல் முறையில் வெற்றியாளராக மொஹமட் நசீம் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழுடன் வெளிவந்த சிறப்பு இதழில் (Sparkling Christmas Shopping Guide) உள்ள Ranomoto பற்றிய ஆக்கத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து குலுக்கல் மூலம் தெரிவுசெய்யப்படும் வெற்றியாளருக்கு  ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மோட்டர் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சரியான விடையை எழுதி அனுப்பியவர்களுள் குலுக்கல் முறையில் கொழும்பு 12 ஐ சேர்ச்த மொஹமட் நசீம் என்பவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். 

அதன்படி வெற்றிபெற்ற வெற்றியாளரான மொஹமட் நசீம் என்பவருக்குரிய  மோட்டார் சைக்கிள் பரிசை  Express News Papers நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி  செந்தில்நாதன், Ranomoto நிறுவனத்தின் தலைவர் அனில் சரோஜ் ரணதுங்க ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்நிகழ்வில் Express News Papers நிறுவனத்தின்  சிரேஷ்ட, கனிஷ்ட முகாமையாளர்கள் அத்துடன் Ranomoto நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் திருமதி நிறுனிக்கா ரணத்துங்க, Ranomoto நிறுவனத்தின் தொழிற்சாலை முகாமையாளர் சத்துரங்க ஜயதிலக்க ஆகியோரர் கலந்துகொண்டனர்.

5 தசாப்தங்களிற்கு மேலாக இலங்கை மக்கள் மனதை வென்றுள்ள உடுகம்பொல ரணோமோட்டோ ( பிரைவட்) லிமிட்டட் நிறுவனத்தினரால் நவீன தொழிநுட்பத்துடன், கண்ணைக் கவரும் விதத்தில் குறைந்த எரிபொருள் பாவனையில் மிகவும் பாதுகாப்பான சௌகரியமான முறையில் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய வகையிலான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பவற்றை அறிமுகப்படுத்தி விற்பனை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.