பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவை பொகவானை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்த இரண்டு பேரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.

இருவரையும் இன்று சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யபட்டுள்ளதாகவும் மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மாணிக்கக்கல் வகைகளையும் பொலிஸார் கைபற்றியுள்ளனர்.

பொகவந்தலாவை ஆரியுபுர பகுதியை சேர்ந்த ஒருவரும் பொகவானை தோட்டப்பகுதியை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளனர். 

கைது செய்யபட்ட இரண்டு சந்தேக நபர்களும் இன்று அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.