“ வெளியுறவுக் கொள்கை மாறாத வரையில் தமிழர்களுக்கு விமோசனமில்லை ”

Published By: Priyatharshan

24 Mar, 2018 | 10:20 AM
image

இந்­தி­யாவின் வெளியு­ற­வுக்­கொள்­கை­யா­னது இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வா­கவும், ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கும், தமி­ழகத் தமி­ழர்­க­ளுக்கும் எதி­ரா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அந்­தக்­கொள்கை மாறாத வரையில் தமி­ழர்­க­ளுக்கு விமோசனமில்லை. அக்­கொள்­கையை மாற்றும் வகை­யி­லான ஆளுமை மிக்க தலை­மை­யொன்றே தமி­ழ­கத்­திற்கு அவ­சியம் என்று தமி­ழக வாழ்­வு­ரி­மைக்­கட்­சியின் தலைவர் தி.வேல்­மு­ருகன் குறிப்­பிட்டார். கேச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அச் செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- விடு­த­லையை எதிர்­பார்க்கும் உற­வு­க­ளுக்­காக தமி­ழ­கத்­தி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக குர­லெ­ழுப்பி வரும் நீங்கள் ஈழத்­த­மி­ழர்­களின் விடயம் சார்ந்து இந்­திய மத்­திய அர­சாங்­கத்­திற்கு எவ்­வா­றான அழுத்­தங்­களை கொடுத்­துள்­ளீர்கள்?

பதில்:- 2009ஆம் ஆண்டு யுத்தம் உக்­கி­ர­மாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது எமது கட்­சி­யா­னது அப்­போ­தைய ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட மத்­திய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அனை­வ­ருக்கும் பகி­ரங்­க­மான கோரிக்கைக் கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தது. 

அந்தக் கடி­தத்தில் குறிப்­பாக, விடு­த­லைக்­காக போரா­டி ­வ­ரு­கின்ற ஒரு தேசிய இனத்­தினை அடக்­கு­வ­தற்கு 2009ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்கம் எவ்­வா­றான சூழ்ச்சி­களைக் கையாண்­டது. இந்­தியா உள்­ளிட்ட 20இற்கும் மேற்­பட்ட நாடு­களின் உத­வி­யுடன் எவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மாக நடந்து கொண்­டுள்­ளது.

தமது விடு­த­லைக்­காக காந்­திய தேசத்­துக்கே காந்­தியம் கற்­றுக்­கொ­டுத்­துள்­ளார்கள். தியாகி திலீபன், அன்னை பூபதி அம்மா போன்­ற­வர்கள் போராடி உயிர்­து­றக்­கும்­போது இந்­திய மத்­திய அர­சாங்­கமும், இந்­திய இரா­ணு­வமும் வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருந்­துள்­ளன.  

முன்னாள் பிர­தமர் ஜவ­ஹர்லால் நேரு வகுத்த பஞ்­சசீ­லக்­கொள்­கைக்கு அமைய இந்­திய மத்­திய அர­சாங்கம் செயற்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அதனை தவறி வர­லாற்­றுப்­பெ­ருமை கொண்ட இன­மொன்று பத்து மைல் தொலைவில் அழிந்து கொண்­டி­ருந்­த­போது வேடிக்கை பார்க்கும் போக்கு இருந்­துள்­ளது. 

ஆகவே உட­ன­டி­யாக இவற்றைக் கவ­னத்தில் கொண்டு நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தினேன். ஆனால் பாரா­ளு­மன்­றத்தில் இருந்த சில கம்யூனிஸ்ட் கட்சி உறுப்­பி­னர்கள் மட்­டுமே குர­லெ­ழுப்­பிய போதும் தமி­ழர்கள் தானே மர­ண­ம­டை­கின்­றார்கள் என்ற எண்­ணத்தில் வட இந்­தி­யர்கள் அதி­க­மா­க­வி­ருந்த அப்­போ­தைய காங்­கிரஸ் தலை­மை­யி­லான மத்­திய அர­சாங்கம் அதனை கருத்தில் கொள்­ள­வில்லை.

அதே­நேரம் ஈழ­வி­டு­தலை போராட்டம் ஆரம்­ப­மான காலத்­தி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக பல தலை­வர்கள் குர­லெ­ழுப்பி வந்­தாலும் ஒரு மேடையில் ஒன்­றாக அணி­தி­ரண்ட வர­லாறு இல்லை. அவ்­வா­றான நிலையில் முதற்­த­ட­வை­யாக தமிழர் வாழ்­வு­ரிமை கூட்­ட­மைப்பு என்­றொரு கூட்­ட­மைப்­பினை எனது தலை­மையில் உரு­வாக்­கினோம்.

ஈழத்தில் நடை­பெற்­றது இனப்­ப­டு­கொ­லையே. அதற்கு சர்­வ­தேச நீதி விசா­ரணை வேண்டும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தீர்­வாக பொது­வாக்­கெ­டுப்பின் அடிப்­ப­டையில் தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் ஆகிய கோரிக்­கை­களை முன்­வைத்து பாரிய பேர­ணியை நடத்­தினோம். தற்­போது வரையில் அந்த கூட்­ட­மைப்பு தொடர்­கி­றது. பல்­வேறு களங்­களில் அழுத்­தங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. 

குறிப்­பாக ஈழ­மக்­க­ளுக்­கான போரா­ட்டங்­களோ அல்­லது குரல்­களோ ஆங்­காங்கே ஒலித்­தாலும்கூட இத்­த­கை­ய­தொரு கூட்­ட­மைப்பின் ஊடாக உல­கத்தின் கவ­னத்­தினை ஈர்க்கும் வகையில் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட போராட்­டத்­தினை முன்­னெ­டுத்­தமை காத்­தி­ர­மானதொரு ­வி­டயம் என்று கரு­து­கின்றேன். 

கேள்வி:- ஈழத்­த­மி­ழர்கள் விட­யத்­தினை மத்­திய அர­சாங்கம் அவ்­வாறு கவ­னத்தில் கொள்­ளாது நடந்து கொண்­ட­மைக்கு என்ன காரணம்?

பதில்:- இறுதி யுத்­தத்தில் நடை­பெற்ற இனப்­ப­டு­கொலை உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளுக்கும் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­திற்கும் பங்குள்­ளது. இந்­திய மத்­திய அர­சாங்­க­மா­னது இலங்கை இரா­ணு­வத்­திற்கு பயிற்சி வழங்­கி­யது. ராடார் கரு­விகள் உள்­ளிட்ட இரா­ணுவ தள­பா­டங்­களை வழங்­கி­யது. விமான நிலை­யங்­களை அமைத்துக் கொடுத்­தது. 

இவ்­வா­றான செயற்­பா­டு­களால் குற்­ற­முள்ள நெஞ்சம் குறு­கு­றுக்கும் என்று சொல்­வார்கள் அல்­லவா? அதனால் தான் அன்றைய காங்­கிரஸ் தலை­மை­யி­லான மத்­திய அர­சாங்­கத்­தினர் எமது கோரிக்­கைகள் உள்­ளிட்ட எந்­த­வொரு விட­யத்­தி­னையும் பெரி­தாக கருத்­திற்­கொள்­ள­வில்லை. ஆட்­சிகள் மாறிய பின்னர் காட்­சிகள் மாறும் என்று எதிர்­பார்த்தோம். ஆனால் ஈழத்­த­மி­ழர்கள் விட­யத்தில் தற்­போ­துள்ள பார­தீய ஜனதாக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கமும் கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கின்­றது.

ஆனால் இந்­தி­ரா­காந்தி அம்­மையார் பிர­த­ம­ராக இருந்தபோது ஈழ­வி­டு­தலைப் போராட்­டத்­தினை ஆத­ரித்தார். தனி தமி­ழீழ அர­சாங்கம் உரு­வா­கு­வ­தனால் இந்­தி­யாவின் வெளியு­ற­வுக்­கொள்­கை­யையோ அல்­லது தேசிய பாது­காப்­பி­னையோ அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­காது என்று நம்­பினார். அதன் கார­ணத்­தி­னா­லேயே விடு­தலைப் புலி­க­ளுக்கு ஆயுதப் பயிற்­சியை இர­க­சி­ய­மாக வழங்­கினார். தற்­போது அவ­ரு­டைய நிலைப்­பா­டுகள் எல்லாம் மாற்­ற­ம­டைந்து விட்­டன.

கேள்வி:- தற்­போ­தைய இந்­திய வெளியு­ற­வுக்­கொள்­கை­யா­னது எவ்­வா­றுள்­ள­தாக உணர்­கின்­றீர்கள்?

பதில்:- இந்­திய வெளியு­ற­வுக்­கொள்­கை­யா­னது இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வா­ன­தா­கவும், ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கும், தமி­ழக தமி­ழர்­க­ளுக்கும் எதி­ரா­க­வுமே அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

தமி­ழர்கள் ஈழத்­திலும் சரி, தமி­ழ­கத்­திலும் சரி எந்த நேரத்­திலும் தனி­நாட்­டுக்­கோ­ரிக்­கையை முன்வைத்து பிரிந்து செல்ல எத்­த­னிக்கக் கூடி­ய­வர்கள். இதனால் இந்­தி­யாவின் ஒற்­று­மைக்கும் இறை­யாண்­மைக்கும் பங்கம் விளை­விக்கக்கூடி­ய­வர்கள் என்று வடஇந்­தி­யர்கள் தற்­போதும் நம்­புகின்­றார்கள். 

மத்­திய அர­சாங்­கத்தில் கொள்கை வகுப்பு, ஆலோ­சனை வழங்கல், புல­னாய்­வுத்­துறை உள்­ளிட்ட மிகப்­பெரும் ஆளுமை செலுத்­தக்­கூ­டிய இடங்­களில் அனை­வரும் தமி­ழர்­களை சற்றும் பிடிக்­காத வட இந்­தி­யர்கள், மலை­யா­ளிகள் உள்­ளிட்­ட­வர்­களே இருக்­கின்­றார்கள். இவர்கள் தமி­ழர்­களை தட்டி வைக்க வேண்டும் என்றே கரு­து­கின்­றார்கள்.

ஈழத்திலுள்ள தேசிய தமி­ழினத்­திற்­கான தனித்தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு விட்டால் இந்­தி­யா­விலும் தமி­ழர்கள் தனி­நாட்­டினை கோரி­வி­டு­வார்­களோ என்ற அச்சம் மத்­தியில் உள்ள அதி­கா­ர­ வர்க்­கத்­தி­ன­ருக்கு உள்­ளது. இதன் வெளிப்­பா­டு­களை தற்­போது காண­ மு­டி­கின்­றது. 

ஈழத்தில் எவ்­வாறு இரா­ணுவ மய­மாக்கல் உள்­ளிட்ட திட்­ட­மிட்ட சிங்­கள பேரி­ன­வாத நிகழ்ச்சி நிரல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதோ அதே­போன்றுதான் அண்­மைக்­கா­ல­மாக தமி­ழ­கத்­திலும் பாரிய இரா­ணுவ மய­மாக்கல் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. 

இரா­ணுவ பயிற்­சிக்­கூ­டங்கள், முகாம்கள் என்­பது ஒரு­புறம் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­கொண்­டி­ருக்­கையில் மறு­பக்­கத்தில் தமி­ழ­கத்­திற்கு சொந்­த­மான காணி­களை கைப்­பற்றும் முயற்­சியில் செல்­வந்­தர்­களை பயன்­ப­டுத்தி காணி­களை கையகப்­ப­டுத்தி பெரு­நி­று­வ­னங்­களை அமைக்கும் செயற்­பாடும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அத­னை­வி­டவும் அணு­உ­லைகள், அணு ஆராய்ச்சி கூடங்கள் அமைத்தல், மீதேன் எரி­வாயு போன்ற நாச­கார திட்­டங்­கள் தமி­ழ­கத்தில் மாத்­தி­ரமே திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

அத­னை­வி­டவும் இந்தி மொழி திணிப்பு நடை­பெ­று­கி­றது. அரச பத­வி­களில் மண்ணின் மைந்­தர்­க­ளுக்கு இட­மில்லை. அரச விழாக்­களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றது. காவிரி நீர் மறுக்­கப்­ப­டு­கின்­றது. பாலாறு பாலை­வ­ன­மாக்­க­ப்­படு­கி­றது. முல்­லைப்­பெ­ரி­யாற்றின் அணைக் கட்­டை உயர்த்த கேரளம் தயா­ரில்லை. மருத்­துவத்துறைக்கு பேர் ­போன இந்த பூமியில் நீட் முறை திணிக்­கப்­ப­டு­கின்­றது. 

கல்­வியில் 27 சத­வீத இட­ஒ­துக்­கீடு மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­கின்­றது. வெளிநாட்­ட­வர்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரிமை முறை­யற்ற வகையில் வழங்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு ஆயிரம் அடக்­கு­முறை விட­யங்­களை அடுக்கிச் செல்­ல­மு­டியும்.  ஈழத்தில் எவ்­வாறு சிங்­கள பேரி­ன­வாதம் தமி­ழர்­களின் இருப்­பினை தகர்க்க முற்­ப­டு­கின்­றதோ அதே நிலை­மைதான் இங்கும் உள்­ளது. 

மத்­திய அர­சாங்­க­மா­னது அறி­விக்­கப்­ப­டாத சிவில் யுத்­த­மொன்றை தமி­ழக மண்ணில் திட்­ட­மிட்டு செய்து வரு­கின்­றது. இவ்­வாறு சென்றால் இன்­னமும் 25ஆண்­டு­களில் தமி­ழகம் பறி­போகும் நிலை­மையே ஏற்­படும். 

தமி­ழ­கத்தின் முன்­னைய தலை­வர்கள் அடைந்தால் தமிழ்நாடு இல்­லையேல் சுடுகாடு என்­றார்கள். பெரியார் தமிழ்நாடு தமி­ழர்­க­ளுக்கே என்று முழங்­கினார். அந்த கோட்­பா­டு­களை மையப்­ப­டுத்­தியே தற்­போதும் மத்­திய அதி­கா­ர­வர்க்கம் தமி­ழர்­க­ளுக்கும், அவர்­களின் தேசத்­திற்கும் எதி­ராக இருக்­கின்­றது. 

கேள்வி:- நீங்கள் குறிப்­பிட்ட மத்­திய அர­சாங்­கத்தின் திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிரலை தகர்ப்­ப­தற்கு தமிழ்த் தேசிய சிந்­த­னை­யுடன் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றீர்கள்?

பதில்:- எமது வாழ்­வு­ரிமை தொடர்­பான விழிப்­பு­ணர்வை எம்­மைப்­போன்­ற­வர்கள் மக்கள் மத்­தியில் முழு வீச்சில் முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். பண்­பாட்டு நிகழ்­வான ஜல்­லிக்­கட்டு விட­யத்தில் அமை­தி­யான வீதிப்­போ­ராட்டம் மூலம் வெற்றி பெற்றோம். அதனை விடவும் போராட்­டங்கள் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்டு கூடங்­குளம், நெடு­வாசல், கதி­ரா­மங்­கலம், வட­காடு போன்ற பகு­தி­களில் இடம்­பெற்று வரு­கின்­றன. 

தமிழர் உரி­மைக்­காகவும், தமிழ் நிலத்தின் உரி­மைக்­காகவும் சம­ர­ச­மில்­லாது இருக்­கின்ற அர­சியல் சக்­தி­க­ளுக்கு தமி­ழக மக்கள் வாய்ப்­ப­ளிக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்கை. தமி­ழ­கத்­தினை தமி­ழர்கள் ஆள­லாம். ஆனால் அவ்­வாறு ஆள்­ப­வர்கள் தமி­ழர்­களின் உரி­மைக்­காக இருக்­கின்­றார்­களா என்­பதை பார்க்க வேண்டும். அவ்­வா­றா­ன­வர்கள் ஆட்­சிக்கு வரு­கின்­ற­போதுதான் தமி­ழர்­களின் இருப்பு உறு­தி­யாகும்.

கேள்வி:- தமி­ழ­கத்தில் ரஜினி, தின­கரன், கமல் போன்­ற­வர்­களால் புதிய கட்­சிகள் உத­ய­மாகி வரு­கின்ற நிலை­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- தி.மு.க, அ.தி.மு.க. போன்ற பெரும் கட்­சிகள் காங்­கிரஸ், பா.ஜ.க. ஆகிய மத்­தியில் உள்ள பிர­தான கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணி­களை வைத்து மிகப்­பெரும் இலஞ்ச ஊழலை மேற்­கொண்­டுள்­ளன. அவ்­வாறு வரு­மா­ன­மீட்­டிய தொகையை பயன்­ப­டுத்தி மக்­களை விலைக்கு வாங்­கு­கின்ற நிலை­மையே இருக்­கின்­றது. இந்த கலா­சாரத்­தி­லி­ருந்து எமது மக்கள் விழிப்­பு­ணர்வு பெற்ற சமூ­க­மாக சிந்­திக்க வேண்டும். 

தற்­போது கூத்­தா­டிகள் அர­சி­ய­லுக்கு வரு­வ­தாக அறி­விக்­கின்­றார்கள். எமது உற­வு­களின் தேசத்தில் இனப்­ப­டு­கொலை நடக்­கும்­போது அதற்கு குரல்­கொ­டுத்­தார்­களா? சர்­வ­தேச நீதி விசா­ரணை வேண்டும் என்று அறி­வித்­தார்­களா? அதனை விடுங்கள். தமி­ழ­கத்தில் கூலி வேலைக்குச் சென்ற 20 தமி­ழர்­களை சுட்­டுக்­கொன்றபோது இவர்கள் ஆகக்­கு­றைந்­தது அஞ்­சலி அறி­விப்­பை­யா­வது விட்­டார்­களா? 

காவி­ரிப்­பி­ரச்­சினை உள்­ளிட்ட எந்­தப்­பி­ரச்­சினை­யிலும் அமை­தி­யாக இருந்து தற்­போது கட்­ட­மைப்பு சரி­யில்லை. நான் வந்து மாற்­றத்­தினைக் கொண்­டு­வ­ரு­கின்றேன் என்று கூறு­வது வேடிக்கை. சினி­மாக்­கா­ரர்­களால்தான் நாட்டை ஆள ­மு­டியும் என்ற பிம்­பத்­தினை உடைத்­தெ­றி­வதை மையப்­ப­டுத்­தியே கள­மாடி வரு­கின்றோம்.  

கேள்வி:- ஜெனிவா ஊடான அழுத்­தங்­களால் இலங்கை அர­சாங்­கத்­தினை பொறுப்­புக்­கூ­ற­லுக்கு உட்­ப­டுத்த முடியும் என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- ஜெனிவா வல்­லா­திக்க நாடு­களின் கூட்டு அரங்­க­மா­கவே உள்­ளது. இனப்­ப­டு­கொலை நடக்­கின்­ற­போது அதனை ஜெனிவா வேடிக்கை பார்த்­தது. ஜெனிவாவின் பிர­தி­நிதி­களை சிங்­கள அர­சாங்கம் வெளியேற்­றி­ய­போதும் அமை­தி­யா­கவே இருந்­தது.  அவ்­வா­றி­ருக்­கையில் தமக்­கான நீதி கோரி ஈழத்­திலும் புலம்­பெயர் தேசங்­க­ளிலும் நடை­பெ­று­கின்ற போராட்­டங்கள், விடா­மு­யற்­சியு­டைய அர­சியல் செயற்­பா­டுகள் மிகவும் அவ­சி­ய­மா­கின்­றன. 

இவற்­றுக்­கெல்லாம் அப்பால் தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தில் இந்­தியா என்­பது மாபெரும் பொரு­ளா­தாரச் சந்­தை­யு­டைய நாடாகும். ஆகவே இந்­தி­யாவைப் பகைத்­துக்­கொண்டு இருப்­ப­தற்கு எந்­த­வொரு வல்­லா­திக்க நாடும் விரும்­பாது. அவ்­வா­றான நிலையில் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­திடம் உள்ள ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு எதி­ரான வெளியு­ற­வுக்­கொள்கை மாற்­ற­ம­டைய வேண்டும். 

அவ்­வாறு கொள்­கை­ ரீ­தி­யான மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு அர­சியல் அதி­காரம் பெற்ற சக்­தி­யாக தமி­ழகம் மாற­வேண்டும். குறிப்­பாக தமி­ழக அதி­கா­ரத்தில் உள்ள முத­ல­மைச்சர் உள்­ளிட்ட ஆட்­சி­யா­ளர்கள் சரி­யான தீர்வை நோக்கி மத்­திய அர­சாங்­கத்­தினை அழுத்­த­ம­ளிக்கக்கூடிய மன­நிலை கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும். 

இந்­தி­யாவின் கரி­சனை இல்­லாது ஈழ விடு­த­லைக்கோ அல்­லது ஈழத்தில் இடம்­பெற்ற விட­யங்­க­ளுக்கோ வல்­லா­திக்க நாடுகள் நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்கும் என்று நம்­ப­மு­டி­யாது. இந்­தி­யாவைப் பகைத்­துக்­கொண்டு ஈழத்­த­மி­ழர்­க­ளுக்­காக செயற்­ப­டு­கின்ற அப்­ப­ளுக்­கற்ற அர­சியல் தலை­மைகள் உலக பூமிப்­பந்தில் இல்லை. 

ஈழ­தேசம் உரு­வா­னாலும் அது இந்­திய பிராந்­தி­யத்­திற்கு நன்­மை­யா­கவே இருக்கும் என்ற மன­நிலை உடைய இந்­தி­ரா காந்தி அம்­மையார் போன்­ற­வர்கள் மத்­தியில் ஆட்­சியில் இருக்க வேண்டும். அதே­நேரம் மத்­தியில் உள்­ள­வர்­க­ளுக்கு அழுத்­த­மளிக்கக் கூடிய ஆளுமை கொண்ட மறைந்த ஜெய­ல­லிதா அம்­மையார் போன்­ற­வர்­களோ அல்­லது ஓய்வில் உள்ள கலைஞர் போன்­ற­வர்­களோ ஆட்­சியில் இருக்க வேண்டும். தற்­போ­தைய சூழலில் அத்­த­கைய ஆளுமை மிக்க எந்­த­வொரு தலை­மை­களும் தமி­ழ­கத்தில் இல்லை. ஆகவே தான் எம்­மைப்­போன்­ற­வர்கள் மாற்­றத்­திற்­கான அர­சி­யலை முன்­னெ­டுக்­கின்றோம். 

கேள்வி:- ஈழத்­திலுள்ள அர­சியல் தலை­வர்கள், அவர்­க­ளுக்­காக குரல்­கொ­டுக்கும் புலம்பெயர் அமைப்பினர் அடுத்த கட்ட நகர்வுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? 

பதில்:- தமிழீழ தேசிய தலைவரால் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாத அரசியலை முன்னெடுக்கும் வகையில் 2009வரையில் நெறிப்படுத்தி வந்திருந்தார். ஆனால் தற்போது தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பது போன்றுதான் நிலைமைகள் உள்ளன. அதாவது, சிங்கள பேரினவாத அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதும், டெல்லி அழைத்தவுடன் வருகை தந்து விருந்துண்டு செல்லும் நிலைமைதான் இருக்கின்றது. 

அவர்கள் மீது நான் குறை சொல்லவில்லை. காரணம், அவர்களுக்கு அங்குள்ள நெருக்கடியின் காரணமாகவோ அல்லது தமிழீழ தேசிய தலைவர் மீண்டும் வந்து கேள்வி கேட்கவா போகின்றார் என்ற மனநிலை காரணமாகவோ அவர்கள் நினைத்ததை செய்து கொண்டிருக்கலாம். அது அவர்களுடைய அரசியல். அது குறித்து இங்கிருந்து நான் விமர்சனம் செய்யவிரும்பவில்லை. 

இருப்பினும் இனப்படுகொலைக்கு முகங்கொடுத்த, உயிர்த்தியாகம் செய்த இனத்திற்காக உறுதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டுமே தவிர சிங்களத் தலைமைகளின் கால்களை கழுவி செயற்படும் வகையில் எந்தவொரு தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இருக்கக்கூடாது என்பதே எனது வேண்டுகோளாகும். 

புலம்பெயர் தேசங்களில் ஈழத்தில் விதையாக வீழ்ந்துள்ளவர்களுக்காக குரல்கொடுத்து உணர்வுடன் செயற்படுகின்றார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறும் அதேநேரம் ஒற்றுமையோடு தொடர்ந்தும் உலக சமூகத்திற்கு அழுத்தமளியுங்கள். என்றாவது ஒருநாள் உலக சமூகம் நீதியின் பக்கம் திரும்பி எமக்கான விடுதலையை வழங்கும் என்ற நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாது பயணியுங்கள்.

(நேர்காணல் : தமிழகத்திலிருந்து ஆர். ராம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22