போதை மாத்­தி­ரை­களை மாண­வர்­க­ளுக்கு விற்­பனை செய்து வந்த மருந்­தக உரி­மை­யாளரொருவர் பண்­டா­ர­வளை பொலி­ஸா­ரால் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மருந்­த­கத்­தி­லி­ருந்த பெருந்­தொ­கை­யான போதை தரும் மாத்­தி­ரை­க­ளையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

பண்­டா­ர­வளை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லொன்­றி­னை­ய­டுத்தே, மேற்­படி மருந்­த­கத்தை சுற்­றி­வ­ளைத்து பெருந்­தொ­கை­யான போதை மாத்­தி­ரை­களை மீட்­ட­துடன்  மருந்­தக உரி­மை­யா­ள­ரையும் பொலிஸார் கைது செய்­தனர்.

பாட­சா­லைக்கு செல்லும் உயர்­தர வகுப்பு மாண­வர்­களை மையப்­ப­டுத்­தியே நீண்­ட­கா­ல­மா­க­ இம் மாத்­தி­ரைகள் விற்­பனை செய்­யப்­பட்டு வந்­தமை ஆரம்பகட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்­துள்­ளது.

கைது செய்­யப்­பட்­டவர் விசா­ர­ணை­களின் பின்னர் பண் டாரவளை நீதிவான்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவா ரென்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.