பாதாள உலகக் குழுவை அழிக்க முடியாமைக்கு நல்லாட்சி மாத்திரமல்ல கடந்த அரசாங்கமும் காரணம் : ஞானசார தேரர் 

Published By: Priyatharshan

23 Mar, 2018 | 11:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

விடுதலைப் புலிகளின் இயக்கத்தினை முற்றாக அழித்து நாட்டை ஒருமைப்படுத்திய அரசாங்கத்திற்கு வெளிப்படையாக செயற்படும் பாதாள குழுவினரை அழிக்க முடியாதுள்ளமை வேடிக்கையாகவுள்ளது.

புலிகளின் விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட உத்திகளை பாதாள உலகக் குழுவினர் மீது செயற்படுத்த அரசு பின்வாங்குவது வேடிக்கையாகவுள்ளது என பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் பாதாள உலகக் குழுவினரின் தாக்குதல்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போது அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தின் கீழ் தற்போது மனித படுகொலைகள் வெளிப்படையாகவே இடம் பெற்று வருகின்றன. 

குறித்த விடயத்தில் பாதாள உலகக் குழுவினரை மாத்திரம் குறை கூற முடியாது மனித மனங்களில் வன்மங்களே தற்போது மிதமிஞ்சியதாக காணப்படுகின்றன. பாதாள உலகக் குழுவினரின் தாக்குதல்கள் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றன. இதற்கு தேசிய அரசாங்கத்தினை மாத்திரம் குறைகூற முடியாது. கடந்த கால அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும்.

பாதாள குழுவின் எழுச்சியை அரசியல்வாதிகளே உருவாக்கினர் தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு இன்றுவரை இவர்களை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டே  உள்ளனர். 

குறித்த பாதாள குழுவின் பின்னணியில் எந்த அரசியல்வாதிகள்   உள்ளார்கள்  என்ற விடயத்தினை  நன்கு அறிந்தும் சட்டம் உரிய நடவடிக்கைகளை  துரிதமாக மேற்கொள்ள பின்வாங்குகின்றது.

நாட்டில் 30 வருட காலமாக இடம் பெற்ற விடுதலை புலிகள் இயக்க போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் பல்வேறு இராஜதந்திர விடயங்களையும் பிரயோகித்தது. இதற்கு பிரதான காரணம் இடம்பெற்ற யுத்தம் இரண்டு இனங்களுக்கு இடைப்பட்டதாக காணப்பட்டதாலும் நாட்டின் பெரும்பாண்மை இனத்தின் பெருமைகளுக்கு எதிராக அமையும் என்ற காரணத்தினாலும் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டது. 

ஆனால் பாதாள குழுவினரின் விவகாரத்தில் கடந்த கால அரசாங்கம் உட்பட நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்பற்ற முறைகளிலேயே செயற்படுகின்றது.

பாதாள குழுவினரின் செயற்பாடுகளின் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தினமும் அச்சத்துடனே வாழ்கின்றனர். அரசாங்கமும் பாதாள  குழுவினை  கட்டுப்படுத்த பல சட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது . இருப்பினும் இவைகள் நடைமுறையில் எவ்வித பயனும் அளிக்காது சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. அரசாங்கம் பாதாள குழுவினரை முற்றாக அழிக்க வேண்டுமாயின் பிரத்தியேக துறையினை சுயாதீனமாக உருவாக்கி அதனை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08