உகாண்டாவில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உகாண்டாவின் Entebee விமான நிலையத்தில் இருந்து  துபாய் செல்வதற்கு தயாராக இருந்த போது  விமான பணிப்பெண் ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறந்து சரிப்பார்த்துள்ளார். 

அப்போது  எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது. உடனடியாக வைத்தியசாலைக்குக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் விமான பணிப்பெண்ணை  பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இச் சம்பவம் உகாண்டாவில் பரபரப்பைவு ஏற்படுத்தியுள்ளது.