அங்­குள்ள மக்­களின் மனக்­கி­டைக்கைகள் அவ்­வாறு அமைந்­தி­ருக்­கையில் குழத்­துப்­புலா இறப்பர் தோட்­டத்தின் முதலாம் பிரி­வுக்­காக உதவி முகா­மை­யாளர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அலு­வ­ல­கத்தில் மேற்­பார்­வை­யாளர் பி.கே.குரியன் சில கருத்­துக்­களை முன்­வைக்­க­லானார். அவர் குறிப்­பி­டு­கையில், கேரள மாநில அர­சாங்கம் மற்றும் கேரள வனத்­துறை திணைக்­களம் ஆகி­யன இணைந்து மறு­வாழ்வு தோட்­டங்­களை பரா­ம­ரித்து வரு­கின்­றன. இந்­திய –  இலங்கை பிர­த­மர்­க­ளுக்கு இடையில் 1964 ஆம் ஆண்டு கைச்­சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தத்­தினை அடுத்து 1972 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக அய்­ர­நல்­லூரில் மறு­வாழ்வு தோட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. அத­னை­ய­டுத்து 1973ஆம் ஆண்டு குழத்­துப்­புலா மறு­வாழ்வு தோட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. 

தற்­போது கேரள மாநி­லத்தின் தொழில்­லாளர் மற்றும் திறன்­துறை திணைக்­க­ளத்தின் கீழ் மறு­வாழ்வு தோட்­டங்கள் நிரு­வ­கிக்­கப்­பட்டு  வரு­கின்­றன. குழத்­துப்­புலா, அய்­ர­ நல்லூர், புணலூர், கூவக்­காடு உள்­ளிட்ட மறு­வாழ்வு தோட்­டங்­களின் நிரு­வாக இயக்­கு­ந­ராக கே.கார்த்­தி­கேயன் (ஐ.எப்.எஸ்) இருக்­கின்றார். குழத்­துப்­புலா மற்றும் புணலூர் ஆகிய மறு­வாழ்வு தோட்­டங்­களின் முகா­மை­யா­ள­ராக ஜெயப்­பி­ரகாஷ் காணப்­ப­டு­கின்றார். மேலும் நிரு­வாக செயற்­பாட்­டுக்­காக முதலாம் பிரிவு உதவி முகா­மை­யாளர் அலு­வ­ல­கமா­னது காணப்­ப­டு­கின்­றது. 

நான் இந்த அலு­வ­ல­கத்தில் மேற்­ப­ார்­வை­யா­ள­ராக கடந்த 35ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி ­கொண்­டி­ருக்­கின்றேன். இந்த அலு­வ­ல­கமே குழத்­துப்­புலா மற்றும் புணலூர் ஆகிய தோட்­டங்­களின் நிரு­வா­கங்­களை முன்­னெ­டுக்­கின்­றது. எனது சேவைக் ­கா­லத்தின் இடையில் மூன்று முதல் நான்கு ஆண்­டுகள் மட்­டுமே பணி­யாற்ற முடி­யாது போயுள்­ளது. குழத்­துப்­புலா மறு­வாழ்வு தோட்­டத்தில் ஆரம்­பத்தில் 675குடும்­பங்­களும் பின்னர் 25 குடும்­பங்­களும் குடி­ய­மர்த்­தப்­பட்­டன.

குழத்­துப்­புலா தோட்­ட­மா­னது 2070ஹெக்­டெயர் பரப்­ப­ளவு கொண்­ட­தாக உள்­ளது. இந்த தோட்­டத்தில் 1400தொழி­லா­ளர்கள் பணி­யாற்­று­கின்­றார்கள். இதில் 700பேருக்கும் மேற்­பட்­ட­வர்கள் இலங்­கை­யி­லி­ருந்து வந்­த­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள். இயன்­ற­ வ­ரையில் இந்த தோட்­டத்தில் அந்த மக்­க­ளுக்­காக வேலை­வாய்ப்­புகளை வழங்கி வரு­கின்றோம். 

இந்த மக்­க­ளுக்­கான குவாட்டர்ஸ் வச­தி­களை நாங்கள் இல­வ­ச­மாக வழங்­கி­யுள்ளோம். கல்வி கற்­ப­தற்­கான ஏற்­பா­டு­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. மின்­சாரம், குடிநீர் போன்­ற­வையும் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இதனை விடவும் அவர்­க­ளுக்கு முற்­பணம் வழங்­கு­வ­தற்­கான வச­திகள், மேல­திக வேலை நேர கொடுப்­ப­ன­வுகள் ஆகி­ய­வையும் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று குறிப்­பிட்டார். 

இச்­ச­ம­யத்தில் நீண்­ட­கா­ல­மாக இந்த மக்கள் நீங்கள் கூறும் குவாட்­டர்­ஸினுள் நெருக்­க­டி­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­றார்கள் அல்­லவா? அதற்கு மாற்று நட­வ­டிக்­கை­களை ஏன் எடுக்க முடி­யா­துள்­ளது என்று கேட்­ட­போது, அவர்­களின் வாழ்க்கை நிலை தரம் குறை­வா­கவே உள்­ளது. அதனை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கடந்த ஐந்­தாறு வரு­டங்­க­ளாக படிப்­ப­டி­யாக தனி­வீ­டு­களை அமைக்கும் திட்டம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது என குறிப்­பிட்­ட­தோடு குறித்த 1ஏ லய­னுக்கு செல்லும் வழியில் அமைக்­கப்­பட்­டுள்ள இரண்டு புதிய வீடு­க­ளையும் சுட்­டிக்­காட்­டினார். 

அதே­நேரம் இந்த இறப்பர் தோட்டம் ஒரு­கா­லத்தில் 24கோடி­ரூபா வரு­மானம் ஈட்­டி­யி­ருக்­கின்­ற­ போது அண்­மைக்­கா­ல­மாக உல­க­ சந்­தையில் ஏற்­பட்­டுள்ள இறப்­ப­ருக்­கான வீழ்ச்­சி­யா­னது அங்கும் எதி­ரொ­லிப்­ப­தா­கவும் அந்த மேற்­பார்­வை­யாளர் மேலும் குறிப்­பிட்டார்.

சம்­பள நிர்­ணய சிக்கல்

ஆண்­டாண்டு தோறும் இலங்கைத் தோட்­டத் ­தொ­ழி­லா­ளர்­களின் வயிற்றில் புளி­யை க­ரைக்கும் சம்­ப­வ­மாக தொடர்ந்து கொண்­டி­ருக்கும் சம்­ப­ள ­நிர்­ணயம் போன்ற அவர்­களின் உற­வு­க­ளாக இருக்கும் இந்த மக்­களும் ஆண்­டாண்டு தோறும் சம்­பள நிர்­ண­யத்­தினை இல­வு­காத்த கிளிகள் போன்று எதிர்­பார்த்­து கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இவர்கள் அர­சாங்­கத்தின் நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட தோட்­டங்­களில் பணி­யாற்­றி­னாலும் மாநில அல்­லது மத்­திய அர­சாங்­கங்கள் இவர்­களின் சம்­ப­ளத்­தினை நிர்­ண­யிக்க முடி­யா­துள்­ளது. இந்த மாநி­லங்­களில் உள்ள அரச மற்றும் தனியார் தோட்­டங்­களின் சங்­கங்களை சேர்ந்த பிர­தி­நி­திகள் கூடியே நாளொன்­றுக்­கான சம்­ப­ளத்­தினை தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாக இருக்­கின்றார். ஆகவே நியா­ய­மான சம்­ப­ளத்­தினை எதிர்­பார்த்­தி­ருக்கும் இந்த மக்­க­ளுக்கு எதிர்­பார்ப்பு பெரி­ய­ளவில் நிறை­வே­றி­யது கிடை­யாது. ஆண்டு தோறும் சம்­பள நிர்­ணயம் அதி­க­ரிக்­கப்­ப­டா­மைக்கு இங்­குள்ள சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கள் பந்து பரி­மாற்றம் போன்று பரஸ்­பர கருத்­துக்­களை கூறி தப்பி பிழைத்­து ­கொள்­கின்­றன. 

நாடற்­ற­வர்­க­ளுக்கு உரித்­துடன் வாழ்­வ­ளித்த மறு­வாழ்­வ­ளிக்கும் தோட்­டங்கள் என்று கூறப்­பட்­டாலும் நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு மேலாக இவர்­களின் அன்­றாட வாழ்வு தத்­த­ளித்­து ­கொண்டு தான் செல்­கின்­றது. 

கேள்­விக்­கு­றி­யான சம­உ­ரிமை?

தோட்­டங்­களில் கட­மை­யாற்­று­வ­தற்­காக பார­தத்தின் பல­பா­கங்­க­ளி­லி­ருந்து இலங்­கையின் பிரித்­தா­னி­யர்­களால் மலை­ய­கத்­திற்கு அழைத்து வரப்­பட்­டார்கள். தோட்­ட­ வே­லை­யா­ளர்கள் என்ற பெயரில் அவர்­களின் முதுகில் அடிமை சாசனம் எழு­தப்­பட்­டது. அவர்­களின் வரு­கை­யினை அடுத்து மக்கள் தொகை கணிப்­பிடப்பட்டது. சிங்­கள தேசிய இன­வாத சக்­திகள். 11.7 சத­வீ­த­மாக இருக்கும் இத்­தொ­கை­யினர் தொடர்ந்தும் இலங்கை ­தீவில் இருந்தால் நாள­டைவில் நாம் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் என்று மார்பு தட்டும் கோட்­பாட்­டுக்கு ஆப்பு வைத்து விடும் என்ற அச்­சத்தின் கார­ண­மாக சிங்­கள தேசிய இன­வாத சக்­திகள் ஓர­ணியில் திரண்டு பிர­ஜா­வு­ரிமை சட்­டத்­தினை திட்­ட­மிட்டு நிறை­வேற்­றி­யது. இத­னை­ய­டுத்து இந்­தி­யப்­ பி­ர­தமர் நேருவும், இலங்கைப் பிர­தமர் கொத்­த­லா­வ­லவும் இப்­பி­ரச்­சி­னையை யதார்த்த பூர்­வ­மாக கையா­ள­மு­யன்­றாலும் நேருவின் மறை­வுக்கு பின்னர் பிர­த­ம­ராக பத­வி­யேற்றார் லால்­ப­கதூர் சாஸ்­திரி. இலங்­கை­யிலும் அதி­கா­ரத்­தை தக்­க­ வைத்­து ­கொள்ள வேண்டும் என்ற முனைப்­பு­டனும் ஏற்­க­னவே திட்­ட­மிட்ட சிங்­கள தேசிய இன­வாத நிகழ்ச்சி நிரலை சாமர்த்­தி­ய­மாக நிறைவு செய்ய வேண்டும் என்ற அடிப்­ப­டை­யிலும் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க காய்­களை நகர்த்­தினார். 

முன்னாள் பிர­தமர் ஜவ­ஹர்லால் வகுத்த பஞ்­ச­சீ­ல ­கொள்­கையை தான் இரா­ஜ­தந்­தி­ர­மாக கடைப்­பி­டித்து இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை எட்­டு­வ­தாக பகதூர் பெரு­மிதம் கொண்ட அதே­ச­மயம் நாடற்­ற­வர்கள் பிரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைத்த தலைவர் என்ற பெயர் தனக்கு கிடைக்­கின்­றது என்று ஸ்ரீமாவோ பெருமை கொண்டார். இதனை தவிர உணர்­வு­ பூர்­வ­மான விட­ய­மொன்றை அவ்­வி­த­மா­கவே அல்­லது சட்­ட­ரீ­தி­யா­கவோ கையா­ளத் ­தெ­ரி­யாது இரண்டு அர­சாங்­கங்கள் தன்­னிச்­சை­யாக மேற்­கொண்ட ஒப்­பந்­தத்­திற்கு உலக அரங்கில் மகத்­தான ஒப்­பந்தம் என்று விளம்­ப­ரப்­ப­டுத்­தலும் வேறு இடம்­பெற்­றது. 

ஆனால் தந்தை, தாயார் இங்கும் பிள்­ளைகள் அங்­கு­மா­கவும் சகோ­தரங்­களில் ஒரு சில அங்கும் எஞ்­சி­யவை இங்­கு­மா­கவும் உற­வுகள் பிரி­கின்­ற­னவே. ஒரு சமூகம் கூறு­போ­டப்­ப­டு­கின்­றதே என்ற அடிப்­படை மனி­தா­பி­மான சிந்­த­னை­யற்ற நிலையில் தான் அந்த ஒப்­பந்­தத்­தினை முழு­மை­யற்ற வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்கள்.  அன்று அந்த ஒப்­பந்­தத்­திற்கு ஆராத்தி எடுத்து புகழ் ­மாலை சூடி­யி­ருக்­கலாம். ஆனால் தற்­போது என்ன நடந்­தி­ருக்­கின்­றது. பாரத மண்­ணிலே பிறந்த சமூகம் கொத்­த­டி­மை­க­ளாக மலை­ய­கத்­திற்கு கொண்­டு ­வ­ரப்­பட்டு பின்னர் கூறு­போ­டப்­பட்டு அதே அடி­மை­சா­சன வரைய­றையை தாண்­டாது அல்­லவா அமர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் இந்­தி­யாவில் இருந்து வந்த இந்­திய தமி­ழர்கள் அல்­லது தோட்டத் தொழி­லா­ளர்கள் என்ற முத்­தி­ரை­யு­டனும் இந்­தி­யாவில் இலங்­கையில் இருந்து வந்த தோட்டத் தொழி­லா­ளர்கள் அல்­லது சிலோன் காரர்கள் என்ற முத்­தி­ரை­யு­ட­னுமே இரண்டு மூன்று பரம்­பரை கடந்தும் அழைக்­கப்­ப­டு­கின்­றார்கள். பார்க்­கப்­ப­டு­கின்­றார்கள்.  ஆனால் இவர்­க­ளுக்கு இரு நாடு­க­ளிலும் கிடைத்­தது பிர­ஜா­வு­ரிமை மட்­டுமே தவிர.  அந்­தந்த நாடு­களின் தேசிய இனங்­க­ளுக்­கான சம­உ­ரிமை அல்ல. இந்த சமூகத்­திற்கு அந்தந்த நாடு­களின் பிர­ஜை­க­ளுக்­கான சம உரிமை கிட்டும் என்­பது கூட குதி­ரைக்­கொம்­பான விடயம் தான்.  இந்­தி­யாவில் இருக்கும் சிலோன்­காரர்கள் என்ற முத்­திரை உடை­ய­வர்­களுக்­காக பல குரல்கள் தமி­ழ­கத்தில் எழுந்­தி­ருக்­கின்­றன. ஆனால் கேர­ளாவில் உள்ள இந்த மக்கள் தொடர்பில் பெரி­தாக பேசப்­ப­டு­வ­தில்லை. இவ்­வாறு குர­லற்­ற­வர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளுக்கு குர­லெ­ழுப்­ப­போ­வது யார் என்­பது பிர­தான கேள்­வி­யா­க­வுள்­ளது.  

கவ­னத்தில் கொள்­வார்­களா?

அதே­நேரம் கடந்த ஆண்டு 14ஆவது சர்­வ­தேச வெசாக்  தினத்­தினை முன்­னிட்டு இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, தனது நாட்டு சொந்­தங்கள் வாழும் மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்து அட்டன்  டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையை திறந்து வைத்­த­தோடு நோர்வூட் டன்பார் விளை­யாட்டு மைத­னத்தில் உரை­யாற்­றினார். 

இதன்­போது, மலையக மக்­க­ளுக்­காக ஏற்­க­னவே 4ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்டம் அமுலில் இருக்­கின்­றது. இதற்கு மேல­தி­க­மாக 10ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு இந்­தியா உத­வி­ய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் அம்­புலன்ஸ் சேவை உள்­ளிட்ட இதர அடிப்­படை சேவை­க­ளுக்கு உத­வ­வுள்­ள­தா­கவும் அறி­வித்­தி­ருந்தார். 

இது மலை­யக சொந்­தங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யான செய்­தி தான். வர­வேற்­கத்­தக்­க­து­மான விட­யமும் தான். ஆனால் அவ­ரு­டைய அதி­கார எல்­லைக்குள் தற்­போது வரையில் நாதி­யற்று ஒரு சமூகம் வாழ்ந்து வரு­கின்­றது என்­பது இந்த நொடி வரையில் அவ­ரு­டைய புல­னுக்கு ஏன் எட்­ட­வில்லை. கேரள மறு­சீ­ர­மைப்பு தோட்ட மக்­களின் பிரச்­சினை மத்­திய மாநில அர­சு­க­ளுக்­கி­டை­யி­லான பந்­து­வி­ளை­யாட்­டாக இருக்­கின்­றது என்­ப­தை­யா­வது பிர­தமர் நரேந்­திர மோடி உணர்ந்து கொள்­வாரா? அவ்­வாறு உணர்ந்தால் அவர் எவ்­வா­றான நட­வ­டிக்கை எடுப்பார்?

2025இற்குள் பாரத மண்ணில் காணி உரிமை அற்­ற­வர்கள் என்ற எவரும் இருக்­க ­மாட் ­டார்கள் என்று பிர­தமர் மோடி பல­மாக அறி­வித்­தாலும் அது சாத்­தி­ய­மா­குமா? பிர­தமர் மோடியின் கவர்ச்­சி­யான காணி உரிமை அறி­விப்பு அடுத்த பொதுத்தேர்தலை மையமாக வைத்தது என்பது மக்கள் மனதில் மையம் கொள்ளும் காரணமாகாதா?

இதனை விடவும் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல் கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்போது மாநில ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அக்கட்சியின் பினராயி விஜயன் கேரள மாநில முதலமைச்சராக உள்ளார். சமத்துவ கொள்கையை சுமந்து நிற்கும் இவர்களின் ஆட்சியில் கூட இந்த மக்களுக்கான உண்மையான மறுவாழ்வு கிடைக்காதா? இவ்வாறு கேள்விகள் நீண்டு கொண்டுள்ளன. இதற்கும் அப்பால் இந்திய இலங்கையில் மலையகத்தில் வாழும் மக்களுக்காக குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான தரப்பினரும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தரப்பினரும் இந்திய அரசியல் தரப்புக்களுடன் பல்வேறு பட்ட நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கின்றார்கள். இவர்களை விட ஏனைய மலையக அரசியல் தரப்பினரும், சிவில் சமூகத்தினரும், புத்திஜீவிகளும் கூட இந்திய தரப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். 

அங்குள்ள மக்களின் சொந்தங்களே கேரள தோட்டங்களிலும் அடிமைச் சாசனம் எழுதப்பட்ட சமூகமாக இந்த நொடிவரையில் பரிதவித்து வருகின்றன என்பதை உணர்ந்து கொண்டு நட்புறவைப் பயன்படுத்தி காய்களை நகர்த்தி கருமங்களை முன்னெடுப்பார்களா?                                             முற்றும்