பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை அடிப்படையில் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கு பாகிஸ்தான் மிகுந்த மதிப்பளிக்குமென இலங்கைக்கான பாஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் ஜான் பாஸ் கான் தெரிவித்தார்.

இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரகத்தில் பாகிஸ்தானின் 78 ஆவது தேசியதினம் பதில் உயர்ஸ்தானிகர்  ஜான் பாஸ் கான் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதன்போது பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றிவைத்த பதில் உயர்ஸ்தானிகர் நகழ்வில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை அடிப்படையில் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளுக்கு பாகிஸ்தான் மிகுந்த மதிப்பளிக்கின்றது. 

வரலாற்றின் மூலம்  விதைக்கப்பட்ட இத் திருப்திகரமான இருதரப்பு உறவானது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்பு என பல்வேறு துறைகளில் பரிணமித்திருக்கின்றது.

பாகிஸ்தானிய மக்கள் மற்றும் அரசாங்கம் சார்பாக இலங்கை அரசாங்கம், அதன் மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றம், சமாதானம், தேசிய ஒற்றுமை, மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு தனது வாழ்த்துக்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  இலங்கை பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் அங்கத்தவர்கள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் அங்கத்தவர்கள், இலங்கைவாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.