இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரகத்தில் பாகிஸ்தானின் 78 ஆவது தேசியதினம் பதில் உயர்ஸ்தானிகர்  ஜான் பாஸ் கான் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தங்களது தாய்நாட்டினை  துடிப்புமிக்கதாகவும், முன்னேற்றமுடையதாகவும், ஜனநாயக நலன்புரி அரசாக வலிமைபெறச்செய்வதற்கான உறுதிமொழிகளுடன் கொண்டாடப்பட்ட தேசிய தினத்தில் இலங்கை வாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் பலர் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தானின் தேசிய கொடியை பதில் உயர் ஸ்தானிகர்  ஜான் பாஸ் கான்  தற்காலிக உயர் ஸ்தானிகரால் ஏற்றிவைக்கப்பட்டது. 

பின்னர் பாகிஸ்தானிய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன.

1940 ஆண்டு வரலாற்றுமிக்க “லாஹிர் தீர்மானத்தினை” நிறைவேற்றி அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் பாகிஸ்தான் என்ற தேசம் உருவாகுவதற்கு வழிவகுத்த துணைக்கண்டத்தின் முஸ்லிம்களின் மேன்மையான சாதனையினை நினைவுகூறுமுகமாக  பாகிஸ்தானின் தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 திகதி  கொண்டாடப்படுகின்றது.

இந்நிகழ்வில்  இலங்கை பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் அங்கத்தவர்கள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் அங்கத்தவர்கள், இலங்கைவாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.