பிலிப்பைன்ஸ் பொலிஸாருக்கும் போதைப் பொருள் கடத்துபவர்களுக்குமிடையே நடந்த மோதலில் 13 நபர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் வியாபாரம் பிலிப்பைன்ஸில் தலைத்தூக்கியுள்ள நிலையில் ரோட்ரிகோ டியுடர்டே நாட்டின் அதிபராக பதவியேற்ற பின்னர் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

ரோட்ரிகோ டியுடர்டேயின் வழிகாட்டலின் பேரில் கடந்த 20 மாதங்களில் 4000த்திற்கும் மேற்பட்டோரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸின் புலகான் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில்  போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இம் மோதலில் 13 போதைப்பொருள் வியாபாரிகள் பொலிஸாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

இந்த ஒரு நாள் நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 19 துப்பாக்கிகளும்  250 பொதிகளடங்கிய  போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.