தனிப்பட்ட காரணங்களுக்காக வீரர்களின் வாய்ப்பை பறிக்க வேண்டாம்..!

Published By: Robert

23 Mar, 2018 | 10:35 AM
image

அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடை­பெ­ற­வுள்ள கொமன்வெல்த் போட்­டி­க­ளில் பங்­கேற்­க­வி­ருந்த எமது பெயர்­களை ஒலிம்பிக் சங்கம் நீக்­கி­விட்­ட­தாக ஜிம்­னாஸ்டிக் வீரர்கள் இருவர் குற்­றஞ்­சு­மத்­தி­யுள்­ளனர்.

கொமன்வெல்த் போட்­டி­க­ளுக்கு இலங்­கை­யி­லி­ருந்து பங்­கேற்­க­வி­ருந்த ஆண்கள் பிரிவு ஜிம்­னாஸ்டிக் அணிக்கு தற்­போது வாய்ப்பு மறுக்­கப்­பட்­டுள்­ளது. 

அவர்கள் குறித்த நேரத்தில் அனு­மதிப் பத்­தி­ரங்­களை சமர்ப்­பிக்­கா­மையே இதற்கு காரணம் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், நேற்று பொது நூலகத்தில் நடைபெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்ட குறித்த வீரர்கள் இருவர் தாம் முதல் கட்ட அணியில் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்ததாகவும் தற்­போது இறுதி அணியில் தமது பெயர்­களை நீக்­கி­யி­ருப்­ப­தா­கவும் குற்­றஞ்­சாட்­டினர். 

ஆனாலும் கொமன்வெல்த் போட்­டி­க­ளின்­போது தாம் பயிற்­சி­களை மேற்­கொள்ள தமக்கு கொமன்வெல்த் போட்டி ஒருங்­கி­ணைப்­பா­ளர்கள் நேரம் ஒதுக்­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர். 

தாம் நேரம் தாழ்த்தி அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கி­யி­ருந்தால் தமக்கு எப்­படி நேரம் ஒதுக்­கு­வார்கள் என்றும் அவ் வீரர்கள் கேள்வி எழுப்­பினர்.

இதில் டில்ஷான் கவின் என்ற வீரரின் பயிற்­சி­யா­ளரும் தந்­தை­யு­மான வருண பிரசாத் ஒலிம்பிக் சங்கத் தேர்­த­லின்­போது எதிரணிக்கு ஆதரவாக செயற்பட்டமையே இவ்  வீரர்களின் நீக்கத்திற்கு காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஹன்ஸ கயசான் என்ற மற்றைய வீரர் கூறும்போது, மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு மத்தியில் நான் பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வு பெற்றேன். தற்போது என் வாய்ப்பை மறுக்கின்றனர். 

பிச்சையெடுத்தாவது என்னை போட்டியில் பங்குபற்றத் தேவையான பணத்தைப் பெற்றுத்தருவதாக எனது தந்தை அமைச்சருடனான சந்திப்பின்போது கூறினார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07