அச்சுறுத்தல் : தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி சடலமாக மீட்பு

Published By: Priyatharshan

23 Mar, 2018 | 06:55 AM
image

யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நகேஸ்வரன் கௌசிகா (வயது 23) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

குறித்த பெண் யாழ்.மருதடியிலுள்ள நண்பியின் வீட்டில் தங்கிவாழ்ந்த நிலையில்  வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பிற்பகல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

இவர் கடந்த வருடம் பேராதெனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பெண் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ். பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் அவர், பல்வேறு ஊழல்கள் தொடர்பான விடயங்களில் சட்டத்தரணி ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் பெரும் தொகையான பணத்தை தாம் திருடிவிட்டதாகவும் தெரிவித்து, தம்மை அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே தான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக குறித்த சங்க அங்கதவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20