“காணாமல்போனோர் அலுவலகம் பிரச்சினைக்கு தீர்வுதராது ; இலங்கை விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்”

Published By: Priyatharshan

22 Mar, 2018 | 10:45 AM
image

காணாமல்போனோர் அலு­வ­லகம் ஏனைய  ஆணைக்­கு­ழுக்­களை போல ஆக்­க­பூர்­வ­மாக செயற்­ப­டு­மாக இருந்தால்   பிழை­களை சுட்­டிக்­காட்டி வழக்­கு­களை தாக்கல் செய்­ய­க்கூ­டிய பலத்தை கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் இச்­சட்­டத்தின் ஊடாக அவை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பல­த­ட­வைகள் கூடியும் ஒரு பயனும் இல்லை. இந்த அலு­வ­லகம்  கடந்த கால சம்­ப­வங்­களை ஒரு­போதும் தேடப்­போ­வ­தில்லை. விசா­ரிக்­க­ப் போ­வ­து­மில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார். 

ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐக்கிய நாடு­களின்  மனித உரிமைப் பேர­வையின்  37 ஆவது கூட்டத்  தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் ஜெனிவா வந்­துள்ள கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம்  'கேச­ரி'க்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே    மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு;

கேள்வி: ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரின்  அறிக்கை தொடர்பில்  உங்கள்  கருத்­தென்ன? 

பதில்:இரண்டு வருட கால அவ­காசம் வழங்கி ஒரு வருடம் முடி­வ­டையும் காலப்­ப­கு­தியில் வாய்­மூல அறிக்கை ஒன்றை ஆணை­யாளர் வெளி­யிட வேண்டும் என்ற பின்னணி­யில்தான் இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கு­வ­தாகக் கூறிய போதிலும் ஆணை­யா­ளரின் கருத்து கடந்த வருடம் மார்ச் மாதம் ஆணித்­தர­மா­கவே முன்­வைக்­கப்­பட்­டது.  2015ஆம் ஆண்டு முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணை­க­ளுக்கு எமது அர­சாங்கம் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.  

மனித உரிமை பேர­வை­யோடு ஒத்­துப்­போ­கின்றோம் என்­பதை வெளியில் காட்டிக் கொள்­வ­தற்­காக ஒத்துக் கொண்­ட­னரே ஒழிய உண்மை தன்­மை­யோடு ஒத்­துக்­கொள்­ள­வில்லை. தமது அச­மந்த போக்­கையே காட்டி வந்­துள்­ளது. இடைக்­கால அறிக்­கையை பார்க்­கும்­போது அர­சாங்­கத்தை முற்­று­மு­ழு­தாக அம்­ப­லப்­ப­டுத்தி 30 - 1 பிரே­ர­ணையை நிறை­வேற்ற எவ்­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை என ஹுசைன்  தெரி­வித்­தி­ருந்தார். இறு­தியில் ஆணித்­த­ர­மாக 'மாற்று வழியை தேட வேண்டும் " என்­பதை உறுப்பு நாடு­க­ளிடம் பரிந்­து­ரைத்­துள்ளார். 

 அதன் ஒரு வழி­யாக அந்­தந்த நாடுகள் இலங்­கையில் போர்க் குற்­றங்­களை நடத்­தி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­ப­வர்­க­ளுக்­கெ­தி­ராக வழக்­கு­களை அந்­தந்த நாடு­க­ளி­லேயே முன்­னெ­டுக்­கலாம் என சொல்­லி­யி­ருந்தார். காரணம் அத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு பெரி­ய­ள­வி­லான ஏற்­பா­டுகள் தேவை­யில்லை.  இலங்­கையில் பொறுப்புக் கூறலை உறுப்பு நாடு­கள்தான் கேட்­டி­ருக்­கின்­றன. ஆனால் இலங்கை அந்த 30 இல் 1 பிரே­ர­ணையை நிறை­வேற்­றாமல் உள்­ளது. என­வேதான் உறுப்பு நாடு­களை இவ்­வாறு அந்­தந்த நாடு­க­ளி­லேயே  வழக்கு தாக்கல் செய்­யு­மாறு சொல்­லப்­பட்­டுள்­ளது. 

இலங்கை கடந்த 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து மனித உரி­மை­பே­ர­வையில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்டு இலங்கை சுமார் 5 ஆண்­டு­க­ளாக முக்­கி­ய­மான ஒரு இடத்தில் இருந்­துள்ள நிலையில் மனித உரிமை ஆணை­யா­ளரே மாற்று வழியை தேடு­மாறு சொல்­வா­ராக இருந்தால் மனித உரி­மை­ப்பே­ர­வை­யி­லுள்ள மிக­ப்பெ­ரிய பல­வீனம் குறித்து நாம் சிந்­திக்­க­வேண்டும். உறுப்பு நாடு விரும்­பா­விடில் பேர­வையில் என்ன தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டாலும் குறித்த நாடு பிரே­ர­ணையை விரும்பி ஏற்­றாலும் கூட அதனை விரும்பி நடை­மு­றைப்­ப­டுத்த தயா­ரில்­லா­விட்டால் பேர­வை­யினால் ஒன்­றுமே செய்ய முடி­யாது. 

எனவே, அந்த யதார்த்­தத்தை விளங்கி கொண்­டுதான் மாற்று வழி­களை தேடச் சொல்­லி­யுள்ளார்.  அந்த வகையில் 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து சொல்லி வரு­வது மனித உரிமைப் பேரவை மிக பல­வீ­ன­மான ஒரு கட்­ட­மைப்பு  என்­ப­தாகும். எனவே, வரு­கின்ற இரண்­டா­வது வரு­டத்தில் இலங்கை அரசு தப்­பிக்க முடி­யாது. நிச்­சயம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி கிடைக்க கூடிய வகையில் எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம். 

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பா­னது  2017ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தது.  சுமந்­திரன் இங்கு மேலும் ஒரு வருடம் கால அவ­காசம் வழங்­கு­மாறு  கேட்­டி­ருப்­ப­தாக தற்­போது நீங்கள் கூறி­யி­ருக்­கின்­றீர்கள், ஆனால், அரசு எவ்­வித பொறுப்பு கூற­லையும் முன்­னெ­டுக்­க­வில்லை. இந்­நி­லையில், மேலும் கால அவ­காசம் வழங்­கு­வது எந்த வகையில் இப்­பி­ரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் பங்­க­ளிப்பு செய்யும்? 

பதில்: என்னைப் பொறுத்­த­வ­ரையில் அரசு எவ்­வித பொறுப்பு கூற­லையும் செய்ய போவ­தில்லை. ஆனால், அர­சாங்­கத்­தினால் முக­பா­வ­னை­போல முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக காட்­டப்­பட்­டு­வரும் ஒரே விடயம் காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம். அந்த அலு­வ­ல­கத்தை எடுத்துக் கொண்டால் முத­லா­வ­தாக பாதிக்­கப்­பட்ட குடும்­பங்கள் அவ்­வ­லு­வ­ல­கத்தை  நிரா­க­ரிப்­ப­தற்­கான காரணம் , அவ்­வ­லு­வ­ல­கத்தில் உள்ள விசா­ரணை அதி­கா­ரிகள் அல்­லது உறுப்­பி­னர்கள்  இரா­ணு­வத்­தோடு நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர். சிவில் சமூக தலை­வர்கள் அர­சாங்க பங்­கா­ளி­க­ளாக செயற்­பட்­ட­வர்கள். எனவே, இப்­ப­டிப்­பட்­ட­வர்­களை கொண்டு அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை பிர­யோ­கித்து உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கை­யின்­மையால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்கள் நிரா­க­ரிக்­கின்­றன. 

இரண்­டா­வது, இவ்­வ­லு­வ­லகம் ஏனைய  ஆணைக்­கு­ழுக்­களைப் போல ஆக்­க­பூர்­வ­மாக செயற்­ப­டு­மாக இருந்தால்.  பிழை­களை சுட்­டிக்­காட்டி வழக்­கு­களை தாக்கல் செய்­ய­க்கூ­டிய பலத்தை கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால், இச்­சட்­டத்தின் ஊடாக அவை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பல­த­ட­வைகள் கூடியும் ஒரு பயனும் இல்லை. இந்த அலு­வ­லகம்  கடந்த கால சம்­ப­வங்­களை ஒரு­போதும் தேடப்­போ­வ­தில்லை. விசா­ரிக்­க­போ­வ­து­மில்லை. இந்­நி­லையில் 30 -1 தீர்­மா­னத்தை நிறை­வேற்ற தாங்கள் ஏதோ ஒரு­வ­கையில் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கின்றோம் என  வெளியில் காட்­டிக்­கொள்ளும் இவ்­வி­ட­யத்தில் கூட இத்­தனை குள­று­ப­டிகள் நில­வு­மாயின் மற்ற விட­யங்­களில் அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை முறை­யாக முன்­னெ­டுக்கும் என்­பதை எதிர்­பார்க்க முடி­யாது. 

உண்­மையில் கடந்த வரு­டமே இந்த இரண்டு வருட கால அவ­காசம் வெறு­மனே இந்த அர­சாங்­கத்தை காப்­பாற்றிக் கொள்­வ­தற்­கா­கத்தான் என்று நாம் சொல்­லி­விட்டோம் .  காரணம் கடந்த வரு­டமே இந்த அரசு பொறுப்புக் கூறலை முன்­னெ­டுக்கத் தயா­ரில்லை என்று கூறி­ய­து­மட்­டு­மன்றி  பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் பல மேடை­களில் நாம் ஒரு­போதும் எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரையும்,  நீதி­மன்றின் முன்னால் நிறுத்தப் போவ­தில்லை என கூறி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் பொறுப்­பு ­கூறல் விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஏற்­ற­வாறு செயற்­ப­டு­வார்­களா என  நம்­ப­மு­டி­யாது. எனவே, கால அவ­கா­சம் வழங்­கு­வது என்­பது மீண்டும் இந்த அரசை நெருக்­க­டி­க­ளின்றி தப்­பிக்க செய்யும் செய­லாக அமையும் என்­பதில் சந்­தே­கமே இல்லை. 

கேள்வி:மனித உரிமைப் பேரவை யின் ஆணை­யாளர் ஹுசைனே மாற்றுத் திட்டம் குறித்து பரி­சீ­லிக்க வேண்டும் என்றும், உங்­க­ளது  கட்­சியோ அரசு இழைத்த குற்­றங்­க­ளுக்­காக சர்­வ­தேச நீதி­மன்றில் நிறுத்த வேண்­டு­மென கூறி­யுள்­ளது. ஆனால் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது தற்­போது இதனை சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு கொண்டு செல்ல முடி­யாது என ஆணித்­தர­மாக சொல்லி வரு­கின்­றது. இது குறித்து உங்­களின் கருத்து? 

பதில்: அவர்­க­ளது கருத்­தா­னது  இந்த  குற்­ற­வியல் விட­யத்தில் ரோம் பிர­க­ட­னத்தில்  கையொப்­ப­மி­ட­வில்லை என்­ப­தாகும். அந்த வகையில் இதில் கையொப்­ப­மி­டாத ஒரு நாடு சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றில் ஒரு நாட்டை விசா­ரிப்­ப­தாக இருந்தால் யுத்தக் குற்ற  நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்லும் விட­யத்தில் ஆத­ரவு வழங்­கப்­படும் என்று  தற்­போது ஐ.நா. சபை அமர்­வு­களில் பங்­கேற்க வந்­தி­ருக்கும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  ஸ்ரீதரன்  கூறு­கிறார்.

என்னைப் பொறுத்­த­வ­ரையில் அப்­படி பார்க்கப் போனால் சுமந்­திரன் கருத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது. ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உண்­மை­யான நிலைப்­பாட்டை அவர்கள் கூறு­கி­றார்கள். ஸ்ரீதரன் இவ் அமர்­வுக்கு வந்­ததே தன்­னு­டைய செல்­வாக்கை வளர்த்­துக்­கொள்­வ­தற்­கே­யாகும்.  தான்   ஒரு நல்ல பிள்ளை. இந்த சம்­பந்தன், சுமந்­திரன் போன்­ற­வர்­களின் கருத்­தோடு இல்லை என்­பதை காட்டி கொள்ள தமிழ் மக்­க­ளி­டையே நல்ல பெயர் எடுக்­கவே இங்கு வந்­துள்ளார். சொந்த தலை­மைத்­து­வத்தை வழிக்கு கொண்டு வர­மு­டி­யாமல் தன்­னு­டைய சொந்த அர­சியல் எதிர்­கா­லத்­திற்­கா­கவே அவர் இங்கு வந்­துள்ளார் என்­பதே உண்மை. 

இன்று இங்கு அவர் வந்து என்ன சொன்­னாலும் தலை­மைத்­துவம் கூறும் கருத்­தையே  உலகம் கேட்­க­போ­கின்­றது அந்த தலை­மைத்­துவம் மிகத் தெளி­வா­னது வெளிப்­ப­டை­யா­னது. விமர்­சிக்­கலாம் ஆனால் அது வெளிப்­ப­டை­யாக  நேர்­மை­யாக அவர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள் ஒரு வருட கால அவ­காசம் வழங்­கியே ஆக வேண்டும். 

கேள்வி: தற்­போது அமெ­ரிக்­காவில் சந்­திப்­புக்­களை மேற்­கொண்­டுள்ள சுமந்­திரன்  ஒரு­வ­ருட காலத்­துக்குள் மாற்று வழி­களை கையா­ளு­மாறு கூறி­ய­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ளன. இது எவ்­வ­கையில் சாத்­தி­ய­மாகும்

பதில்: அவர்­க­ளு­டைய மாற்று வழிகள் இந்த 30 1 தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் கடும் அழுத்தம் வழங்க வேண்டும்.  அந்த கடும் அழுத்­தத்தில் மாற்று வழிகள் வழங்க வேண்டும் என்று கூறு­கின்­றார்­களே தவிர பொறுப்­புக்­கூறல் என்ற விட­யத்தில் மாற்று வழி என்ற வேறு தளத்­திற்கு நாங்கள் இலங்­கையை கொண்டு செல்ல வேண்டும் என கூற­வில்லை. அது தான் அவர்­களின் நிலைப்­பாடு. 

 கடந்த மார்ச் மாதத்­திலும் இரண்டு வருட கால அவ­காசம் என்ற விடயம் சொல்­லப்­பட்ட போது அர­சாங்­கத்தை இரண்டு வருடம் காப்­பாற்­றி­யுள்­ளார்கள் என்ற விமர்­சனம் வரத் தொடங்க அவர் கள் கூற வந்­தது  அர­சாங்­கத்­திற்கு கால அட்­ட­வணை ஒன்றை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­பதை தாங்கள் கேட்­டி­ருக்­கின்றோம் என்­ப­தாகும்.  தவிர  அர­சாங்­கத்தை  இரண்டு வரு­டத்­திற்கு காப்­பாற்ற இணங்­க­வில்லை என்று பொய் சொன்­னார்கள்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையின் இந்தச் செயற்­பா­டுகள் அர­சாங்­கத்தை கப்­பாற்­று­வ­தற்­கான முயற்சி என்­ப­தாக நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

பதில்:  என்னைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன்று இந்த அர­சாங்­கத்தின் ஒரு அங்கம். அது அர­சாங்­கத்தின் நலன்­களை பேணு­வ­தற்­காக செயற்­பட்டு வரு­கின்­றது. 

கேள்வி:  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வுகள் குறித்து உங்கள் பார்வை எவ்­வா­றுள்­ளது.

பதில்:  நான் நினைக்­கின்றேன் முத­லா­வது தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு இந்த தேர்தல் ஒரு முக்­கிய  அத்­தி­வா­ரத்தை வழங்­கி­யுள்­ளது. அது யாழ். தேர்தல் மாவட்­டத்தில் தான் கூடு­த­லான தளத்தை வழங்­கி­யுள்­ளது. ஆனால் நிச்­ச­ய­மாக தேர்தல் முடி­வ­டைந்த பிற்­பாடு ஏனைய மாவட்­டங்­க­ளையும் விட யாழ்ப்­பா­ணத்தில் இந்­த­ளவு முன்­னேற்றம் காணப்­பட்­டுள்­ள­மை­யா­னது ஏனைய மாவட்­டங்­க­ளிலும் கூட மாற்று சக்­தி­யாக மக்கள் எங்­களை கருதும் அள­விற்கு யாழ்ப்­பா­ணத்தின் வெற்றி அமைந்­துள்­ளது. பலர் தொடர்­பெ­டுத்து யாழ்ப்­பா­ணத்தில் இந்­த­ளவு வெற்றி பெறு­வீர்­க­ளாயின் உங்­க­ளுக்கே நாங்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கலாம் என்று கூறும் அள­விற்கு இந்­த­தேர்தல் நிலை­மைகள் மாற்­றி­ய­மைத்­துள்­ளன. அந்த வகையில் கட்சி என்ற வகையில் இது எமக்கு முக்­கி­ய­மான களம்.  அதற்கு எமது மக்­க­ளுக்கு நன்­றியை தெரி­வித்துக் கொள்­கின்றோம். ஊட­கங்­க­ளுக்கும் தெரி­வித்துக் கொள்­கின்றேன். ஊட­கங்கள் நியா­ய­மா­ன­மு­றையில் எங்­க­ளு­டைய கருத்­துக்­களை வெளிக் கொண்டு வந்­தி­ருந்­தன. 

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளு­டைய அமைப்பு இன்று  திருப்பு முனை­யா­கவே இருக்­கி­றது. அவர்­க­ளுக்கு இரண்டு பாதை­க­ள்தான் உள்­ளன.  அவர்கள் தொடர்ந்தும் கடந்த 8 வருட காலத்தைப் போன்று மக்­களை ஏமாற்றி வந்த பாதையை தொட­ரு­வார்­க­ளாயின் அல்­லது  அந்த  தலை­மைத்­து­வத்தை நீக்கி நம்­ப­கத்­தன்மை கொண்ட தலை­மைத்­து­வத்தை ஏற்­ப­டுத்தி திருந்தாவிடின் இந்த தேர்தல் ஊடாக கிடைத்த வீழ்ச்சி எதிர்காலங்களிலும் அதிகரித்து கொண்டு செல்லும். 

யாழ்ப்பாணத்தில் நாங்கள் கணிசமாக அவர்களின் அருகில்  வந்துள்ளோம். வட கிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் அவர்களின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் அச்சரிவின் மிகப் பிரதான தரப்பாக சரிவை எங்களுக்கு சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றிருக்கின்றது. 

யாழ்ப்பாணத்தில் அவர்களின் வீழ்ச்சியை எங்களுக்கு சார்பாக பாவித்தி ருக்கின்றோம். ஆனால் ஏனைய மாவட்டங்களில் அது பிரிந்து சென்றுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறையைப் பொறுத்தவரையில் அது உதயசூரிய னுக்கும் பிள்ளையானுக்கும் என பிரிந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அப்படியல்ல ஒரு தரப்பாக நாங்கள் மாற்றியமைத் துள்ளோம்.ஆகவே  கூட்டமைப்பை பொறுத்தவரையில்  அடிப்படை அரசியலில் செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால்  இந்த தேர்தலில் மக்கள் கூறிய விடயங் களை சரியாக நோக்கோடு அவர்கள் அதை எடுக்காமல் ஐ.நா.  மனித உரி மைப் பேரவை விடயத்தில் நடந்து கொண்ட மாதிரி தொடர்நதும் நடந்து கொண்டிருந்தால் அவர்களுடைய வீழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். 

(எஸ்.ஸ்ரீகஜன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13