கண்டி திக­னயில் திட்­ட­மிட்­ட­வ­கை­யி­லேயே முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதன்­போது சட்டம் ஒழுங்கை நிலை­நாட்ட அர­சாங்கம் தவ­றி­விட்­டது என்று  ஜெனி­வாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற    இலங்கை குறித்த உப­கு­ழுக்­கூட்டம் ஒன்றில்   சர்­வ­தேச முஸ்லிம் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.  

ஐரோப்­பிய  முஸ்­லிம்­களின் இலங்­கைக்­கான அமைப்பு  இந்த விசேட உப­கு­ழுக்­கூட்­டத்தை ஜெனிவா வளா­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. 

இந்த உப­கு­ழுக்­கூட்­டத்தில்    சர்­வ­தேச மனித உரிமை  செயற்­பாட்­டா­ளர்கள்,  ஐரோ ப்பிய முஸ்லிம் பிர­தி­நி­திகள்,  புலம்­பெயர்  முஸ்­லிம்கள்  என பல்வேறு தரப்­பி­னரும்    கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.  

இதில்  கருத்து வெளி­யிட்ட  ஐரோப்­பிய முஸ்லிம் பிர­தி­நி­திகள் குறிப்­பி­டு­கையில்,

கண்டி திகன பகு­தியில்  முஸ்­லிம்கள் மீது   திட்­ட­மிட்­ட­வ­கை­யி­லேயே  தாக்­கு­தல் கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இந்த சந்­தர்ப்­பத்தில் சட்டம், ஒழுங்கை நிலை­நாட்ட  அர­சாங்கம் தவ­றி­விட்­டது. அத­னால்தான் வன்­மு­றைகள்   அதி­க­ரித்­தன.  இதன் பின்னர் இவ் ­வாறு  வன்­மு­றைகள் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

குறிப்­பாக சர்­வ­தேச சமூகம் இதன் ­மூலம் அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க முன்­வ­ர­வேண்டும் என்றார். 

இதே­வேளை  உப­கு­ழுக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த  சர்­வ­தேச மனித உரிமை செயற்­பாட்­டாளர்   லுக்மான் ஹரீஸ் குறிப்­பி­டு­கையில், 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இலங்­கையில் இன­வா­தக்­க­ருத்­துக்கள்  பரப்­பப்­பட்­டன.  அது­ மட்­டு­மன்றி    திக­னயில் இடம்­பெற்ற வன்­மு­றை­களால்  சிங்­கள மக்கள் மகிழ்ச்­சியில் இருப்­ப­தாக இன­வாதக் கருத்­துக்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன.   

தனிப்­பட்ட ரீதி­யான சம்­ப­வங்­களை எடுத்து இவ்­வாறு இன­வாத பரப்­பு­ரை­களை மேற்­கொள்­கின்­றனர்.   கண்டி  வன்­மு­றை ­யா­னது வீதியில் இடம்­பெற்ற ஒரு சம்­ப­வத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டது.   அதாவது  இரண்டு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையில்    முரண்­பா­டுகள் இருப்­ப­தாக வெளிக்­காட்­டு­வ­தற்கு  இந்த வீதியில் இடம்­பெற்ற சம்­பவம் வெளிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.  அது­மட்­டு­மன்றி முஸ்­லிம்கள் போதைப்­பொருட்­களை இலங்­கைக்குள் கொண்­டு­வ­ரு­கின்­றனர் என்ற கருத்­துக்­க­ளையும் பரப்­பு­கின்­றனர்.

அப்­போது  முஸ்லிம்  நபர் கைது ­செய்­யப்­பட்டார் என்றே செய்திகள்  வெளியிடப்படுகின்றன.  ஆனால் ஒரு பெரும்பான்மையினர் ஒருவர் கைது செய்யப்படும்போது அங்கு   இன ரீதியான அடையாளம் வெளிப்படுத்தப்படுவதில்லை என்றார். இதே வேளை இந்த உபகுழுக்கூட்டத்தில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான  காணொளிகளும்  ஒளிபரப்பப்பட் டமை குறிப்பிடத்தக்கது.