இலங்கை, இந்­தியா, மாலை­தீ­வு ஆகிய நாடு­களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்கும் மென்­செஸ்டர் சர்­வ­தேச சுதந்­திரக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்­தயத் திடலில் எதிர்­வரும் 24, 25ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளது.

மென்­செஸ்டர் கால்­பந்­தாட்டப் பயிற்­சி­ய­கத்தின் ஒரு வருட பூர்த்­தியை முன்­னிட்டும் இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டும் இப் போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பயிற்­சி­ய­கத்தின் ஸ்தாபகத் தலைவர் அகஸ்டின் ஜோர்ஜ் தெரி­வித்தார்.

அணிக்கு 9 பேரைக் கொண்ட 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்­கான இப் போட்டித் தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன.

இதில் மாலைதீவிலிருந்து நான்கு அணிகளும் இந்தியாவின் காஷ்மீரிலிருந்து ஒரு அணியும் இலங்கையிலிருந்து 7 அணிகளும் கலந்துகொள்கின்றன.

இப் போட்டித் தொடரின் போது 20 முன்னாள் தேசிய வீரர்கள் பிர­தம அதி­தி­க­ளாக அழைக்­கப்­பட்டு நினைவுச் சின்­னங்கள் வழங்­கப்­பட்டு கௌர­விக்­கப்­ப­ட­வுள்­ளனர். அத்­துடன் ஒவ்­வொரு போட்­டி­யிலும் ஆட்டநாய­க­னுக்­கான விரு­து­களை அவர்கள் கைய­ளிப்­பார்கள்.

12 அணிகளும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இறுதிப் போட்டியுடன் மொத்தமாக 30 போட்டிகள் நடைபெறவுள்ளன. அத்தோடு முதல் சுற்றில் தோல்வி பெறும் அணிகளுக்கும் நம்பிக்கை கொடுத்து அடுத்த சுற்றுக்கு முன்ேனற்றுவதற்காக அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.