மஸ்கெலியா மவுசாகலை நீர்த் தேக்கத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூவரை மஸ்கெலிய அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.

மண் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொக்கோ இயந்திரத்தையும் உழவு இயந்திரத்தையும்  அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வேலைத்திட்டம் மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மண் அகழ்விற்கு அனுமதிபத்திரம் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே  மண் அகழ்விற்கு பயன்படுத்திய இயந்திரங்களுடன் மூவரை அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொள்கின்றனர்.