மஸ்கெலியா, ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தினுல் தவறி விழுந்ததில் ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

சீட்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஜயகுமார் கலைராமன் எனும் 14 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

ஹப்புகஸ்தென்ன பகுதியில் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு விறகு தேடுவதற்காக கெனியன் நீர்தேக்க பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு நேற்று மாலை 4 மணியளவில் சென்றுள்ளார். 

தன்னோடு வரவேண்டாம் என கூறியும் அதனை மீறி மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் நீர் அருவி பகுதியில் மகன் கற்பாறை ஒன்றில் ஏறும் பொழுது கால் தவறி நீர்தேகத்தில் வீழ்ந்துள்ளார். 

இவரை காப்பாற்றுவதற்காக தந்தையும் நீர்தேகத்தில் குதித்துள்ளதுடன் இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் தந்தையின் கூச்சலை கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த மூவர் தந்தையை காப்பாற்றிய போதும் மகனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. 

குறித்த மாணவனின் சடடலத்தை மீட்பதற்காக கொழும்பிலிருந்து சுழியோடிகள் வரவழைத்திருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணையை தொடர்ந்துள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.