புலம்பெயர் தமிழரின் தயாரிப்பில் உருவான “நேத்ரா” ஏப்ரலில் திரைக்கு வருகிறது

Published By: Priyatharshan

20 Mar, 2018 | 05:16 PM
image

கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழரான பரராஜசிங்கம் செல்வநாயகத்தின் ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் எண்டர்பிரைஸின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தென்னிந்திய முழு நீள திரைப்படமான 'நேத்ரா' எதிர்வரும் ஏப்ரல் மாதம் திரைக்குவரவுள்ளது.

இயக்குனர்  ஏ.வெங்கடேஷின் கதையில் இப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப் படத்தின் கதாநாயகனாக வினய்குமாரும் ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 

சஸ்பென்ஸ், காதல், திரிலிங் என காட்சிக்கு காட்சி சுவாரஸ்யங்களை  கொண்டு படம் நகர்கின்றது.

இத் திரைப்படத்தின் காட்சிகள் 80 வீதமானவை கனடவிலும் 20 வீதமானவை இந்தியாவின் சென்னையிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக ஸ்ரீகாந் தேவா கடமையாற்றியுள்ளார்.

படத்தில் ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி எனப் பலர் நடித்துள்ளது.

நேத்ரா திரைப்படத்தின் இசை வெளியீடு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடாவின் ஸ்காபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் இடம்பெற்றது. இசையை டிரண்ட் மியூஸிக் வெளியிட்டது.

நேத்ரா திரைப்படத்தின் முன்னோடி காட்சிகள் யூ டியூபில் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இலங்கையில் இத்திரைப்படத்தை தில்காஷ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், கொழும்பு / மும்பை சார்பில் ‍கெளசல்யா விக்ரமசிங்க வெளியிடவுள்ளார்.

அத்துடன் ஏப்ரல் முதல் வாரம் நேத்ரா திரைப்படம் தொடர்பான ஊடக சந்திப்பொன்றும் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறவுள்ளது.

நேத்திரா குறித்து திரைப்பட வெளியீட்டாளர் ‍கெளசல்யா விக்ரமசிங்க தெரிவிக்கையில்,

சினிமாவில் உள்ள ஈர்ப்புக் காரணமாக இந்தப்படத்தை பரராஜசிங்கம் செல்வநாயகம் தயாரித்துள்ளார். இலங்கை பிரஜையொருவர் முதல் முதலாக தென்னிந்திய திரைப்படமொன்றை தயாரித்துள்ளார்.

இலங்கைக்கு நேத்ராவை லிபர்டிட் சினிமாதான் கொண்டுவரவுள்ளது. இத் திரைப்படம் இலங்கையில் 61 தியேட்டர்களில் திரையிடப்படவுள்ள நிலையில் இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இத் திரைப்படத்திற்கு இலத்திரனியல் ஊடக அனுசரனையை வசந்தம் தொலைக்காட்சியும் அச்சு ஊடக அனுசரணையை வீரகேசரியும் வழங்குகின்றன.

இத் திரைப்பட வெளியீட்டில் இலங்கை திரைப்பட கூட்டுதாபனம் பெரும் பங்காற்றியுள்ளதுடன் நேத்ரா பாகம் 2 உம் விரைவில் வெளிவருமென ‍கெளசல்யா விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். 

தயாரிப்பாளர் பரராஜசிங்கம் செல்வநாயகம் 

நேத்ரா திரைப்படத்தின் தயாரிப்பாளரான பரராஜசிங்கம் செல்வநாயகம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விபயின்றுள்ளதுடன் கணக்காளாராகவும் தொழில்புரிந்துள்ளார். இவரு தந்தையார் ஒரு வைத்தியர் ஆவர். 

லண்டனில் சீமா படித்த பரராஜசிங்கம், ஏயார் லங்காவிலும் தொழில் புரிந்துள்ளார்.

தற்போது இவர் கனடாவில் குடியேறி பல வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றார்.

இந்நிலையில் திரைப்படத் துறையில் இருந்த ஈர்ப்பு காரணமாக ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் (கனடா) எண்டர்பிரைஸை ஸ்தாபித்தார்.

இதன் மூலம் 'மெதுவாக உன்னைத் தொட்டு', 'மலரே மௌனமா' ஆகிய இரு படங்களை தயாரித்த இவர் மூன்றாவது முழு நீளத் திரைப் படமாக நேத்ராவை தயாரித்துள்ளார்.

கடந்த  2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கனடா சென்றிருந்த போது பரராஜசிங்கம் செல்வநாயகத்தை சந்தித்துள்ளார். இதன் மூலம் ஏற்பட்ட நட்பில் இயக்குனர் தன்னிடம் உள்ள கதையை கூற அந்த கதை பிடித்துப் போக இருவரும் கூட்டணி இணைந்து மிக வேகமாக நேத்ரா படத்தினை உருவாக்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35