முன்னாள் இயக்க உறுப்பினர்கள்  நஷ்டஈட்டை பெறமுடியுமா.?

Published By: Robert

20 Mar, 2018 | 03:43 PM
image

(எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

புனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்த காலகட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற நஷ்ட ஈடுகளை முன்னாள் இயக்க உறுப்பினர்கள் பெற மருத்துவச் சான்றிதழ் தொடர்பில் இலகுவான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம்  நடைபெற்ற 23/2  நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுததுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ,

கடந்த யுத்த காலத்தில் காலகட்டங்களில் முறையான பதிவுகள் மற்றும் நோயாளி அட்டைகள் என்பன பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும்  பாதிக்கப்பட்டவர்களது காயப்பட்ட தழும்புகளைத் தவிர அவர்கள் சிகிச்சைப் பெற்றதற்கான வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் தற்போது அரச மருத்துவமனைகளில் மருத்துவ சான்றிதழ்கள் பெற இயலாதுள்ளது என்றும் மேற்படி முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள  முன்னாள் இயக்க உறுப்பினர்கள் தொழில்வாய்ப்புகள் இன்றியும்  போதிய வாழ்வாதார வசதிகள் இன்றியும் தொடர்ந்தும் துயரமான வாழ்க்கையினையே மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கான நஷ்டஈடுகள் கிடைப்பின் அது இவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31