"10 வரு­டங்­க­ளாக எனது மகனை தேடி அலை­கின்றேன்"

Published By: Robert

20 Mar, 2018 | 09:50 AM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

எனது மகனை 10 வரு­டங்­க­ளாக தேடி அலை­கின்றேன் என்று  2008 ஆம் ஆண்டில்  காணாமல்போன  மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாண­வனின்   தந்­தையார்  நேற்று ஜெனி­வாவில் தெரி­வித்தார். 

மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழக மாணவன் கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போன நிலையில் அவ­ரது தந்­தையார் தர்­ம­கு­ல­சிங்கம் தற்­போது ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் நீதி கேட்டு ஜெனிவா வந்­துள்ளார். 

அவர்  கேச­ரிக்கு தொடர்ந்தும்  கருத்துக் கூறு­கையில்,

எனது மகன் கடந்த  2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி லங்கா பெல் நிறு­வ­னத்­திற்கு பயிற்ச்­சி­களை பெற்­றுக்­கொள்ள சென்­றி­ருந்தார். அதன் பின்னர் அவர் வீடு திரும்­ப­வில்லை. இப்­போது பத்து ஆண்­டுகள் ஆகின்­றன, இந்த காலத்தில் கொழும்பில் வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் பொலிஸ் தலைமை அலு­வ­ல­கத்­திலும், குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு உள்­ளிட்ட அனைத்து காவல் நிலை­யங்­க­ளிலும் முறைப்­பா­டுகள் செய்­துள்ளோம். அதேபோல் அமைச்­சர்கள் பல­ரிடம் தமிழ் அமைச்­சர்கள் பல­ரி­டமும் இறுதி­யாக பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி என அனை­வ­ரி­டமும் முறைப்­பாடு செய்­துள்ளோம். காணாமல் போனோர் குறித்து கண்­ட­றிய அமைக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­விலும் நான் சாட்­சியம் வழங்­கி­யுள்ளேன். முழு­மை­யான விப­ரங்­களை இதில் கொடுத்­துள்ளேன். 

எனது மகன் காணாமல் போனமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்­களை நான் சேக­ரித்­து­ கொண்­டுள்ளேன். இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு இயங்­காத பொம்­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. அதன் செயற்­பாட்டால் எமக்கு எந்த நன்­மையும்  இல்லை. பொலிஸும் தக­வல்­களை பதிவு செய்­து­கொண்­டுள்­ளதே தவிர உண்­மை­களை கூறவோ கண்­ட­றி­யவோ முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இது­வரை எந்த முன்­னேற்­றங்­களும் இல்லை.

பூசா முகாமில் எனது மகன் உள்ளார் என்ற தகவல் கிடைத்து எனது மனைவி அங்கு சென்­றி­ருந்தார். எனது மகன் குறித்து முழு­மை­யான தக­வல்­களை கொடுத்து அவரை அடை­யா­ள­ப்ப­டுத்­திய பின்னர் பார்­வை­யிட அனு­மதி வழங்­கப்­ப­டு­வது வழக்கம். அதே நடை­மு­றையில் எனது மகன் இருக்­கின்றார் என கூறி அனு­மதி வழங்­கப்­பட்­டது. அதன் பின்னர்  எனது மனைவி அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். 

எனினும் சிறிது நேரத்தின் பின்னர் யாரு­டைய தலை­யீடு என தெரி­ய­வில்லை எங்­களை தடுத்­து­விட்­டனர். பின்னர் அவர் பிரத்­தி­யே­க­மாக ஒரு சிறையில் இருப்ப­தா­கவும் அங்கு எவ­ருக்­குமே பார்­வை­யிட அனு­மதி இல்லை எனவும் நாம் அறிந்­துகொண்டோம். மீண்டும் நாம் சில முயற்­சி­களை மேற்­கொண்டோம். அங்கு உள்ள சில பொலிஸ் உறுப்­பி­னர்­க­ளுக்கு எனது மகன் குறித்து தக­வல்கள் தெரியும் என உறு­தி­யாக கூற முடியும். எனது மகனின் தொலைபேசியை பாவித்தது ஒரு பொலிஸ் அதிகாரி என்பது நீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர் சரத் சந் திர என தெரிவித்துள்ளனர். எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44