ரோஸி சேனா­நா­யக்க தலை­மை­யி­லான கொழும்பு மாந­கர சபை கொழும்பு மாந­க­ரத்தின் வறுமையை இல்­லா­தொ­ழித்து அலங்­கார மாந­கரமாக மாற்­று­வார்கள் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது. அத்­துடன் மாந­கர சபைக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் மக்களை மறந்­து­வி­டாமல் அவர்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கொழும்பு மாந­கர சபைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக போட்­டி­யிட்டு வெற்­றி­ பெற்­ற­வர்கள் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­துக்­கொள்ளும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

கொழும்பு மாந­கர சபைக்கு இது­வ­ரைக்கும் பெண் மேயர் ஒருவர் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை. முதற்­த­ட­வை­யாக பெண் மேய­ராக ரோஸி சேனா­நா­யக்க தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இவர் அனு­பவம் படைத்­த­வ­ராவார். அமைச்சு பத­வி­களை வகித்­த­வ­ராவார். 

எனவே கொழும்பு நகரை அபி­வி­ருத்தி செய்வதற்கு முன்­னின்று நட­வ­டிக்கை எடுப்பார் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது. இந்­நி­லையில் கொழும்பு மாந­கர சபையின் வெற்­றிக்­காக பாடு­பட்ட அனை­வ­ருக்கும் எனது நன்றியைத் தெரி­வித்து கொள்­கின்றேன். இது பாரிய நக­ர­மாகும். முக்­கி­யத்­துவம் வாய்ந்த நக­ர­மாகும். எனினும் இந்த நக­ரத்தில் வறுமை கோட்­டிற்கு கீழ் வாழ்­ப­வர்­களே அதி­க­மாக உள்­ளனர். ஆகவே இந்த நக­ரத்தை அபி­வி­ருத்தி செய்ய வேண்டும்.

இந்த நக­ரத்தில் குப்பை பிரச்­சினை மற்றும் டெங்கு நோயும் பிர­தான பிரச்­சி­னை­யாக காணப்­பட்­டது. ஆகவே குறித்த பிரச்­சி­னையை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்க வேண் டும். மேலும் மத்­திய அர­சினால் உரிய நிதி ஒதுக்­கீ­டு­களை நாம் முன்­னெ­டுப்போம்.

எனவே ரோஸி சேனா­நா­யக்க தலை­மை­யி­லான கொழும்பு மாந­கர சபை கொழும்பு மாந­க­ரத்தின் வறுமையை இல்­லா­தொ­ழித்து அலங்­கார மாந­கராக மாற்­று­வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அத்துடன் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் மறந்துவிடாமல் அவர்களது பிரச்சி னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.