ஐ.தே.க.வின் மறு சீரமைப்பு அறிக்கை தெரிவிப்பது என்ன ?

Published By: Priyatharshan

19 Mar, 2018 | 09:21 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதனை பெயரிட வேண்டும் என்பதுடன் பிரதி தலைவருக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்றும் கட்சியின் பதவிகளுக்கு செயற்திறன்மிக்கவர்களை அமர்த்த வேண்டும் என  ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

எனினும் இந்த அறிக்கையில் பதவி மாற்றங்களுக்கான நபர்களின் பெயர்களை பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது ஐக்கிய தேசிக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அறிக்கையில் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கட்சியின் மறுசிரமைப்பு குழுவின் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பித்தோம். இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் யார் அறிவதற்கு கட்சியினர் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். இதன்பிரகாரம் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதனை பெயரிட வேண்டும் என அறிக்கையில் கோரியுள்ளோம்.

மேலும் கட்சியின் பிரதிதலைவருக்கு நாடுபூராகவும் சென்று கட்சி பலப்படுத்துவதற்கு அதிகளவிலான வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். மேலும் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். செயற்திறன்மிக்க தலைவர்களை பதவிகளுக்கு நியமிக்கும் படி அறிக்கையில் பரிந்துரைத்துள்ளோம். 

நாம் வழங்கிய அறிக்கைகளை ஆராய்ந்து பின்னர் செய்ற்குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இறுதி முடிவு எடுக்கப்படும். பெரும்பாலும் இம்மாதத்திற்குள் முக்கிய அறிவிப்பொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுப்பார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51