தமிழ் மக்களின்  பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஆர்வம் உள்ளமை எமக்கு தெரியும்  ; சம்பந்தன் 

Published By: Priyatharshan

19 Mar, 2018 | 09:01 PM
image

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும்  ஆர்வம் ஜனாதிபதிக்கு உள்ளது என்பதை   நன்றாக அறிவோம்.  ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை  சமாளிக்க வேண்டியுள்ளது.  எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியரியார்  கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூட திறப்புவிழா நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்,

எமக்கு சுதந்தரம் கிடைத்த பின்னர் நாட்டின் அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து சுதந்திரத்தை வரவேற்றோம். எம் அனைவரதும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகவே அமைந்தன. சுதந்திரத்தின் பின்னர் தமிழ் மக்கள் தமக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவில்லை.  தங்களது பிரச்சினையை தனிநாட்டுக்குள் பிரிக்க  முடியாத ஐக்கிய இலங்கைக்குளே தீர்க்கவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். 

தமிழ் மக்களும் சமூக, பொருளாதார அந்தஸ்துக்களை பெற்று இந்த நாட்டினை ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்லவே விரும்புகின்றனர். 

ஆனால் இந்த கோரிக்கை தொடர்ந்த வண்ணமே இருந்தது. 1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டன. 

அதன் பின்னரே நிலைமைகள் மாற்றம் பெற்றன. அதனை அடிப்படையாக  கொண்டே 30 ஆண்டுகால யுத்தம் நிலவியது, இது நாட்டில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பிரச்சினைகளை தீர்க்க இந்தியா தலையிட்டது, ஏனைய சர்வதேச நாடுகளின் தலையீடுகள் காணப்பட்டன. எனினும் யுத்தத்தின் பின்னரும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. யுத்தத்தின் பின்னரும் பல்வேறு மாற்றங்களுக்கு பின்னரும் தமிழ் மக்களின் விடயத்தில் நெருக்கடிகளே நிலவுகின்றன. எனினும் எமது பிரச்சினைகளை  பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சித்து வருகின்றோம். இந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். அதனால் தான் தமிழ் மக்களின் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்தது. 

தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பது எமக்குத் தெரியும். ஜனாதிபதி தீர்வு குறித்து செயற்படுகின்றனர் என்பது எனக்கு நன்றாக தெரியும். 

இந்த நாட்டில்  தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜனாதிபதி  அவருக்கு உள்ளது. இந்த அரசாங்கத்திற்கும் உள்ளது என்பதை நான் நன்றாக அறிவேன்.  ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் அவருக்கு இருக்கும் சவால்களை  சமாளிக்க வேண்டியுள்ளது.

எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உங்களால் முடியும். அதனை நீங்கள் செய்ய வேண்டும். அப்படியாக நீங்கள் அந்த கருமத்தினை நிறைவேற்றுகின்ற போது சர்வதேச அளவில் நீங்கள் போற்றப்படுவீர்கள். 

சர்வதேச அளவில் உங்களுக்கான மதிப்பும் அங்கீகாரமும் பலமடையும். இந்த நாட்டின் பொருளாதரத்தை மீண்டும் பின்னடைவு நாட்டினை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நகர்வுகளை நாம் தவிருத்துகொள்ள வேண்டும். எமது நாட்டின் பொருளாதரத்தில் தொழிநுட்ப கல்வி முறைமை மிகவும் அவசியமாக கருதப்பட வேண்டும். இன்று உலக நாடுகளின் பொருளாதார இஸ்திரத்தில் தொழிநுட்ப கல்வியும் அதன் மூலமான நகர்வுகளுமே முக்கிய இடைதினை வகிக்கின்றது. 

ஜெர்மனி உலகின் மிகவும் பலமான பொருளாதார கொள்கையினை கொண்டுள்ள நாடாகும். நீண்ட யுத்தம் ஒன்றுக்கு முகங்கொடுத்து நெருக்கடிகள் மிக்க நாடக இருந்த ஜெர்மனி இன்று முன்னேற்றகர பொருளாதார கொள்கையினை கொண்டுள்ளது. அதற்கு அந்த நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் பெற்றைகளின் உருவாக்கவே இதற்குக் காரணமாகும். சிறிய குடும்பங்களாக இவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அவர்களின் பொருளாதரத்தில் அது தாக்கம் செலுத்தியது.   தொழில்நுட்பவியல் வளர்ச்சி தேசிய பொருளாதரத்தில் பாரிய ஒத்துழைப்பினை வழங்குகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31