வாழைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த முண்டம் மீட்பு 

Published By: Priyatharshan

19 Mar, 2018 | 08:07 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்ப்ட்ட நிலையில் கொழும்பு - வாழைத்தோட்டப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த கொஸ் மல்லி எனும் பாதாள உலக உறுப்பினரின் தலைக்குரிய  முண்டமாக கருதப்படும் மனித முண்டம்  அங்குனுகொலபெலஸ்ஸ - முரவெசிஹேன, கோத்தாபயகமவில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் புதைக்கப்ப்ட்டிருந்த நிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டது. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கம்புறுபிட்டிய பொலிஸார் ஊடாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக இவ்வாறு அந்த முண்டம் பகுதி மீட்கப்பட்டுள்ளது. 

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதான நீதிவான் குஷிகா குமாரசிரியின் முன்னிலையில் அம்பாந்தோட்டை சட்ட வைத்திய அதிகாரி  சிசிர செனவிரத்னவின் வழி நடத்தலில்  கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் தடயவியல் பிரிவினரினால் இந்த உடல் பகுதி தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.  

அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குறித்த உடல் பகுதி  தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள கொஸ் மல்லியின் தலை பகுதியில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. கூறுகளுடன் ஒப்பீடு செய்து, உடல் பகுதி தொடர்பில் உறுதியாக அறிக்கை தயார்  செய்யப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.

வாழைத்தோட்டம் பகுதியில் கறுப்பு நிற பொலித்தீன் பையில் போடப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி பொலிஸாரால்  கொஸ்மல்லி எனும் பாதாள உலக உறுப்பினரின் வெட்டி வேறாக்கப்பட்ட தலை மீட்கப்பட்ட நிலையில் அவரது எஞ்சிய முண்டப் பகுதி  அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில்  புதைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்கள் கடந்த சனியன்று கண்டறிந்தனர்.  

இந் நிலையில் அங்குணுகொலபெலஸ்ஸ - முரவெசிஹேன, கோத்தாபயகம பகுதியில் வாழை நட்டப்பட்டிருந்த விவசாய நிலத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் அந்த உடல் பகுதி புதைக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் கைதகையுள்ள சந்தேக நபர் ஒருவர் வாக்கு மூலம் அளித்த நிலையில் அந்த இடத்தை அகழ்ந்து கொஸ்மல்லியின் தலையற்ற முண்டத்தை   மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.  

அதன்படி அந்த இடமானது, நேற்று தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  எல்.ஸ்ரீதாலின் ஆலோசனைக்கு அமைய  பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு விஷேட பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். 

 அன்றைய தினமே  கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஸாவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்ரதிலக, பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா  தலைமையிலான சிறப்புக் குழு, குறித்த பகுதிக்கு சென்று தங்காலை தடயவியல் பிரிவு பொலிஸாருடன் இணைந்து ஸ்தல விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

 அதன்படி அங்குனுகொலபெலஸ்ஸ நீதிவான் முன்னிலையில் கொஸ்மல்லியின் எஞ்சிய உடலை   தோண்டி எடுக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று  தோண்டி எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34