தேசிய அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பில் வெளி­நாட்டு வாழ் இலங்­கை­யர்­களின் கருத்­துகள் உட்­பட யோச­னை­களை உள்­வாங்கும் முக­மாக விசேட நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அர­சிய­ல­­மைப்பு தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் நிபுணர் குழு தெரி­வித்­தது.

வெளி­நாட்டு வாழ் இலங்­கை­யரின் கருத்­துக்கள் மற்றும் யோச­னை­களை காணொளி மூல­மாக பெற்­று­கொள்­வ­தற்­கான கோரிக்­கையை பிர­த­ம­ரிடம் விடுத்­துள்­ள­தா­கவும் அக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது.

கொழும்பு 02 இல் அமைந்­துள்ள அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான கருத்­து­களை உள்­வாங்கும் நிபுணர் குழுவின் அலு­வ­ல­கத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அர­சி­ய­மைப்பு தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் குழுவின் தலைவர் லால் விஜே­ய­நா­யக்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து உறை­யாற்­று­கையில்.

தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மக்­க­ளி­னது யோச­னைகள் உட்­பட கருத்­து­களை உள்­வாங்கும் செயற்­பா­டுகள் நாட­ளா­விய ரீதியில் சிறந்த முறையில் எமது குழு­வி­ன­ரினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் உள்­நாட்டு மக்கள் உட்­பட புதிய அர­சி­ல­மைப்பில் வெளி­நாட்டு வாழ் இலங்­கை­யர்­க­ளி­னதும் கருத்­துக்­க­ளையும் யோச­னை­க­ளையும் உள்­வாங்கும் முக­மாக விசேட நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

எதிர்­வரும் மார்ச் மாதம் இவர்­க­ளி­ட­மி­ருந்து கானொளி மூலம் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான கருத்­துகள் உட்­பட யோச­னை­களை உள்­வாங்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்­கை­யொன்று விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று ஸ்தாபிக்­கப்­படும் தரு­ணத்தில் நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் யோச­னைகள் உட்­பட கருத்­துக்கள் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அந்­த­வ­கையில் எமது நாட்டில் குடி­யு­ரிமை பெற்று வெளி­நாட்டில் வேலை நிமித்­த­மாக பல்­வேறு நாடு­களில் இலங்­கை­யர்கள் வாழ்­கின்­றனர். குறிப்­பாக பலர் ஜரோப்­பிய நாடு­களில் புலம்­பெயர் தமி­ழர்­க­ளாக வாழ்­வ­தோடு பெரு­பான்­மை­யி­னத்­த­வர்­களும் வாழ்­கின்­றனர். இவ்­வா­றா­ன­வர்­களின் உத­விகள் மற்றும் யோச­னைகள் அர­சி­ய­ல­மைப்­பிற்கும், நல்­லி­ண­கத்­திற்கும் அவ­சி­ய­மாகும்.

எனவே, வெளி­நாட்­டுவாழ் இலங்­கை­யர்­களின் கருத்­து­களை புதிய அர­ச­மைப்பில் உள்­ள­டக்­கு­வது தொடர்­பி­லான கோரிக்­கையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முன்­வைத்­துள்ளோம். அதற்குப் பிரதமர் அங்கீகாரம் வழங்குவார் என்றே எதிர்பார்க்கின்றோம். பிரதமரின் அங்கீகாரத்தின் பின்னர் மார்ச் மாதத்தின் இறுதியில் நாங்கள் வெளிநாட்டுவாழ் இலங்கையர்களிடம் கானோளி அழைப்பு மூலம் கருத்துகளை கோருவதோடு உள்நாட்டிலும் இன்னும் பல மாவட்டங்களில் கருத்துகணிப்பிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.