இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி சடலமாக மீட்பு!!!

Published By: Digital Desk 7

19 Mar, 2018 | 12:40 PM
image

மட்டக்களப்பு -வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று  அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறிஞ்சாமுனையைச் சேர்ந்த 29 வயதான  நீலவண்ணன் லோகநாயகி மற்றும் 36 வயதான கந்தசாமி வேதநாயகம்  ஆகியோரை சடலங்களை மீட்டுள்ளனர்.

ஏற்கெனவே திருமணமான இவர்கள் இருவரும் இரண்டாந்தாரமாக ஒருவரையொருவர் திருமணம் செய்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

நீலவண்ணன் லோகநாயகிக்கு முதல் திருமணத்தின்  மூலம் ஒரு குழந்தையும் இரண்டாம் திருமணத்தின்  மூலம் 5 மாதக் கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் சில தடயப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04