கடனட்டை மோசடியில் ஈடுபட்டமையால் பல்வேறு அழுத்தங்களுக்குள்ளான மொரீசியஷ் நாட்டின் ஜனாதிபதி அமீனா குரிப் பகிம் தனது பதவியை இனாஜிநாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரீசியஸ் நாட்டின் ஜனாதிபதியான அமீனா குரிப்-பகிம் பதவி வகித்துவந்துள்ளார். இவர் மீது கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அமீனா குரிப்-பகிம் தடுபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்த போது ஒரு அரசு சாரா தனியார் அமைப்பு வழங்கிய கடனட்டையை பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் டொலர் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக அந்நாட்டின் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டது. 

இதையடுத்து அரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கடனட்டை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்தது. ஆனால் பதவி விலக முடியாது என அவர் அண்மையில் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.