யாழில் மைத்திரி..!

Published By: Robert

18 Mar, 2018 | 04:08 PM
image

யாழ்ப்­பாணம்  மறை­மா­வட்ட ஆயரின் ஆளு­கையின் கீழ் இயங்கும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப ஆய்­வு­கூட கட்­டடம்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நாளை திறந்து வைக்­கப்­ப­டு­கி­றது. 

புலம்­பெ­யர்ந்து வாழும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­களின் 30 மில்­லியன் ரூபா நிதி­யு­த­வியில் இக்­கட்­டடம் நாளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் காலை 9.30 மணிக்கு திறந்­து­வைக்­கப்­ப­டு­கி­றது.

யாழ்.மறை­மா­வட்ட ஆயர் கலா­நிதி ஜஸ் ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை  தலை­மையில் நடை­பெறும் இந்­நி­கழ்வில் ஜனா­தி­ப­தி­யுடன் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை,  எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வாசம்,  கிறிஸ்­தவ விவ­கார அமைச் சர் ஜோன் அம­ர­துங்க, வடக்கு மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் கூரே, மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகியோர் சிறப்பு அதி­தி­க­ளாகக் கலந்­து­ கொள்­கின்­றனர்.

29 ஆண்­டு­க­ளாக புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியில் பணி­யாற்றி, அதில் 10 ஆண்­டு­க­ளாக - அதி­ப­ராக பணி­யாற்­றிய அருட்­தந்தை எம்.ஜெறோ செல்­வ­நா­யகம் அடி­களார் அண்­மையில் பணி­ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து எ.பி. திரு­மகன் அடி­களார் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் அதிபர் பொறுப்பை ஏற்­றி­ருந்தார்.

யாழ்.மறை­மா­வட்­டத்தில் பல கல்­வி­மான்­க­ளையும், ஆயர்­க­ளையும் குருக்க­ ளையும் உரு­வாக்­கிய இக்­கல்­லூ­ரிக்கு புலம் ­பெ­யர்ந்து வாழும் பழைய மாண­வர்­ களின் நிதியுதவியுடன் புதிய விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகூடம் அமையப் பெறுவது வரப்பிரசாதமாகும் என்று கல்லூரி அதிபர் திருமகன் அடிகளார் தெரிவித்தமை குறிப் பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59