நடிகர் மாதவன் தற்போது நம்பி நாராயணன் என்ற படத்தில் விண்வெளி விஞ்ஞானியாக நடிக்கிறார்.

தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த நடிகர் மாதவன் மும்பையில் இதற்கான சத்திர சிகிச்சையை செய்து கொண்டு ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் ஒய்விற்கு பிறகு இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் உருவாகும் நம்பி நாராயணன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் இந்த விண்வெளி ஆய்வு கழகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஒருவர் மீது உளவு துறை குற்றம் சாட்டியது. இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இதில் மாதவன் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இது குறித்து விஞ்ஞானி நாராயணன் பேசும் போது,‘ எம்முடைய வாழ்க்கையில் நடைபெற்ற விடயத்தை மாதவன் மூலமாக திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.’ என்றார்.