வாசனைத் திர­வி­யங்கள் முக­ரப்­படும் வேளை அவை இத­யத்தை அருட்டி இன்ப உணர்வைத் தூண்­டு­கின்­றன என ஆதி­கால மக்கள் அறிந்­தி­ருந்­தார்கள். அந்த நாட்­களில் வாசனைத் திர­வி­யங்­களை பெரும் பணக்­கா­ரர்கள் மட்­டுமே பயன்­ப­டுத்தி வந்­தனர்.

இந்­தி­யாவில் கி.மு. 600 ஆம் ஆண்­ட­ளவில் கன்னோஜை அர­சாண்ட ஹந்­ச­வந்தன் என்ற அரசன் வாசனைத் திர­வி­யங்கள் தயா­ரிப்பை ஊக்­கு­வித்து வந்தான். வெ ளிநா­டு­க­ளி­லி­ருந்து மூலப் பொருட்­களை வர­வ­ழைத்து தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு சலுகை அடிப்­ப­டையில் வழங்­கினான். மேலும் தன்னைப் பார்க்க வரு­ப­வர்­க­ளுக்கு வாசனைத் திர­வி­யங்­களைப் பரி­சாக வழங்­கினான்.

கி.மு. 1580– 1685 இல் எகிப்­தி­யர்கள் பண்­டிகைக் காலங்­களில் ஆண்­களும், பெண்­களும் வாசனைத் திர­விய களிம்­பு­களை மேனியில் பூசி நட­ன­மாடிக் களித்­தார்கள். இது கிரீஸ், ரோம் மற்றும் இஸ்­லா­மிய நாடு­க­ளுக்கும் பரவத் தொடங்­கி­யது.

17 ஆம் நூற்­றாண்டில் வேக வளர்ச்சி

1656 ஆம் ஆண்­டு­களில் பல தயா­ரிப்­பா­ளர்கள் உரு­வாகத் தொடங்­கி­னார்கள். வாசனைத் திர­வி­யங்கள் பொது மக்கள் மட்­டத்தில் புழக்­கத்­திற்கு வந்­தன. இளை­ஞர்கள், யுவ­திகள் அதி­க­மாக உப­யோ­கிக்கத் தொடங்­கினர். யுவ­திகள் வாசனைத் திர­வி­யங்­களை உப­யோ­கித்து இளம் வாலி­பரை காதல் வலையில் சிக்க வைத்து மணம் பரிந்து  கொண்­டார்கள். இவற்றில் சில தோல்­வியில் முடி­வற்­றன. விவாகம் முடிந்த பின்பு வாலி­பர்கள் தாம் எதிர்­பார்த்த பெண் கிடைக்­க­வில்­லையே என உணரத் தலைப்­பட்டு விவா­க­ரத்து வரைச் சென்­றனர். இது பெரும் சமு­தாயப் பிரச்­சி­னையைக் கிளப்பி விட்­டது. இதன் பிர­தி­ப­ல­னாக ஐரோப்­பிய மக்கள் அவை ஒரு விசித்­தி­ர­மான சட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யது.

“மாட்­சிமை தங்­கிய மகா­ரா­ஜாவின் குடி மக்கள் எவ­ரை­யேனும் ஒரு பெண் வாசனைத் திர­வி­யத்தை உப­யோ­கிப்­பதன் மூலம் வஞ்­ச­க­மாக வசீ­க­ரித்து திரு­மணம் செய்து கொண்டால் அம் மடந்­தையின் மாந்­தி­ரீகச் செயல் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம். அவ­ளது விவாகப் பதிவுச் சட்­டப்­படி செல்­லு­ப­டி­யா­காது” எனத் தெரி­வித்­தது அந்தச் சட்டம். நாக­ரிகம் வளர்ச்­சி­ய­டை­யாத அந்­தக்­காலப் பகு­தியில் நாடா­ளு­மன்­றத்தில் சட்டம் இயற்றும் அள­விற்கு வாசனைத் திர­வி­யங்கள் மக்­க­ளி­டையே புகுந்து குழப்­பத்தை விளை­வித்­தி­ருக்­கின்­றன என்றால் அவற்றின் மகி­மையைப் பாருங்கள். நறு­ம­ணங்­களை அதிகம் முகர்ந்­த­றியா மக்­க­ளுக்கு வாசனைத் திர­வி­யங்கள் இன்ப போதையை ஏற்­றி­யது.

அறி­வியல் ஆய்வு

இன்­றைய ஆய்­வா­ளர்­களும் இக்­க­ருத்தை ஊர்­ஜிதம் செய்­தி­ருக்­கி­றார்கள். மனித குலத்­த­வரால் இவ்­வகைத் தீவிர வாச­னைகள் முக­ரப்­படும் வேளை அவை மூளையில் காரணக் காரி­யங்­களை ஆராய முற்­படும் பகு­தியை ஊட­றுத்து இத­யத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் பகு­தியைச் சென்­ற­டைந்து இத­யத்தை வேக­மாகத் துடிக்கச் செய்­கி­றது. அதன் விளை­வாக ஹோர்­மோன்கள் வேக­மாகச் சுரந்து குருதிச் சுற்­றோட்­டத்தில் கலந்து இன்­ப­ப்போ­தையைக் கிளரச் செய்­கி­றது என்­கி­றார்கள் ஆய்­வா­ளர்கள்.

‘சென்ட்’ தயா­ரிப்­பா­ளர்­களின் விளம்­பரம்

இதை ஆதா­ர­மாகக் கொண்டு இன்­றைய ‘சென்ட்’ தயா­ரிப்­பா­ளர்கள் “அழகு  ஆட­வரே ஆர­ணங்­கு­களே நீங்கள் காத­லிக்கும் இனிய வாழ்க்கைத் துணையை அடைய வேண்­டு­மானால் எங்கள்  ‘சென்ட்’ டை ஒரு தடவை உப­யோ­கித்துப் பாருங்கள் கைமேல் பலன் கிட்டும்” என விளம்­பரம் செய்­கி­றார்கள். இந்த விளம்­ப­ரங்­களால் கவ­ரப்­பட்டு ஒரு ஆடவன் தன் இதயம் கவர்ந்த காத­லிக்கு ஒரு சிறிய அத்தர் புட்­டியைப் ரூபா 5000 இற்கு வாங்கிப் பரி­ச­ளிக்­கிறான். அந்த தர­மான அத்தர் புட்­டியை பரி­ச­ளிப்­பதன் வாயி­லாக அவ­ளது இத­யத்தில் இடம்­பி­டித்து விடலாம் என எண்­ணு­கிறான். இருப்­பினும் சில வேளை­களில் அவ­னது ஆசை நிரா­சை­யா­கிப்போய் விடு­கி­றது. அதிக விலை கொடுத்து ஆசை­யாக வாங்­கிய அந்த அத்தர், மங்­கை­ய­ருக்கு முகத்தைச் சுளிக்க வைத்து விடு­கி­றது.

ஏன் சில வாச­னைகள் மக்­களை நன்­றாகக் கவர்­கி­ன்றன, மற்­றைய ரகங்கள் தோல்­வியைத் தழு­வு­கின்­றன? என்­பது இன்­னமும் புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.

வாசனைத் திர­விய தயா­ரிப்பில் வாசனைத் திர­வி­யங்கள் தயா­ரிப்பில் இயற்­கையில் மலர்ந்து மணம் பரப்பும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மலர் ரகங்கள், வேர்கள், கொம்­புகள், இலை, கனி, பிசின் மூலிகை, சரக்­குகள் விதை முத­லி­ய­வற்றை நேர­டி­யாக பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். இத் தயா­ரிப்பில் மேல் குறிப்­பிட்ட பொருட்­க­ளி­லி­ருந்து சார எண்ணை வடித்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இத­னுடன் விலங்கு வர்க்க நிலைப்­ப­டுத்தி பொருட்கள், இர­சா­யனத் திர­வி­யங்கள் அற்­ககோல் முத­லி­ய­ன­வற்றை வெவ்­வேறு விகி­தங்­களில் கலந்து தர­மான அத்தர் வர்க்­கங்­களைத் தயா­ரிக்­கின்­றார்கள்.

கூட்டுப் பொருட்கள் கலக்­கப்­படும் விகிதம்…?

வாசனைத் திர­வி­யங்களை எந்த விகி­தத்தில் கலந்தால் விளையும் லாவண்ய வாசனை மக்­களை இல­குவில் கவரும் என்னும் வர்த்­தக இர­க­சி­யத்தை அறியும் ஆவலில் தயா­ரிப்­பா­ளர்கள் பெரும் பணச் செலவு செய்து போட்டி ஆய்வில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். கூட்டுப் பொருட்கள் தாவர ‘எசென்ஸ்’ உடன் கலக்­கப்­படும் வேளை அரு­மை­யான மலர்­களில் இருந்து பெறப்­பட்ட இனி­மை­யான வாசத்தை பாழ்­ப­டுத்தி விடு­கின்­றன. அவை என்ன விகி­தத்தில் கலக்­கப்­பட வேண்டும் என்­பதில் தான் அத்தர் தயா­ரிப்பின் வெற்றி தங்­கி­யி­ருக்­கி­றது.

   பிரான்ஸ் ‘அத்தர்’ தயா­ரிப்பின் தலை­ந­கரம்

இந்த இர­க­சி­யத்தை பிரான்ஸ் மக்கள் பல கால­மாக அறிந்­தி­ருந்­தார்கள். இந்த வர்த்­தக ரக­சி­யத்தை பிற­ருக்கு வெளி­வி­டாது பரம்­ப­ரை­யாக அத்தர் தயா­ரிப்பில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். குறிப்­பாக ‘கிராஸ்’ என்னும் நகரம் உல­கி­லேயே வாசனைத் திர­விய தயா­ரிப்பின் தலை­ந­கரம் என அழைக்­கப்­ப­டு­கி­றது. இங்கு வாசனைப் பொருள் தயா­ரிப்பின் ஆண்டுப் பரிவர்த்தனை 6000 லட்சம் யூரோவிற்கு மேல் எனக் கூறப்படுகிறது. இந்த நகரம் மத்திய தரைக் கடலை அண்டிய பகுதி என்பதால் மல்லிகை, ரோஜா, லில்லி போன்ற மலர்கள் அதிகம் வளர்க்க முடிகிறது. எனவே இயற்கைப் பொருட்கள் கொண்ட ‘அத்தர்’ தயாரிக்க முடிவது கூடுதல் சிறப்பு. இன்றும் பிரான்ஸ் என்றால் நறுமணம் கமழும் பேரழகிகள் நிறைந்த இடம் என்றே மக்களால் பார்க்கப்படுகிறது. 

எது எப்படியிருப்பினும் நவீன இளந்தலைமுறையினர் இருக்கும் வரை வாசனைத் தயாரிப்பாளர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.