ஜனா­தி­பதி கிண்­ணத்தை வெல்­லப்­போ­வது யார்?

Published By: Robert

18 Mar, 2018 | 09:42 AM
image

கொழும்பில் ஒரு நூற்­றாண்­டுக்கும் மேற்­பட்ட வர­லாற்றைக் கொண்ட இரண்டு பிர­தான முஸ்லிம் பாட­சா­லை­க­ளான ஹமீத் அல்– ஹுசெய்னி கல்­லூரி அணிக்கும் ஸாஹிரா கல்­லூரி அணிக்கும் இடை­யி­லான ஜனா­தி­பதி கிண்ண அழைப்பு பாட­சா­லைகள் கால்­பந்­தாட்­டத்தில் இறுதிப் போட்டி கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடலில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஹமீத் அல்– ஹுசெய்னி கல்­லூ­ரியின் 80களின் பழைய மாண­வர்கள் குழுவின் ஏற்­பாட்டில் இப்­போட்டி 11ஆவது தட­வை­யாக நடத்­தப்­ப­டு­வ­துடன் சகல இனங்­க­ளையும் மதங்­க­ளையும் சேர்ந்த 20 பாட­சா­லைகள் பங்­கு­பற்­றின.

இச்­சுற்றுப் போட்­டியில் லும்­பிணி, கேட்வே, புனித ஆசீர்­வா­தப்பர் ஆகிய அணி­களை வெற்­றி­கொண்டு ஹமீத் அல்– ஹுசெய்னி இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­பெற்­றது.

மறு­பு­றத்தில் இஸி­பத்­தன, மாரிஸ் ஸ்டெல்லா, டி மெஸிநொட் ஆகிய அணி­களை ஸாஹிரா வெற்­றி­கொண்டு இறுதிப் போட்­டியில் விளை­யாட தகுதி­பெற்­றது.

இறுதிப் போட்­டிக்கு தெரி­வான இந்த இரண்டு அணி­க­ளிலும் 19 வய­துக்­குட்­பட்ட கனிஷ்ட தேசிய வீரர்கள் மற்றும் முதல்­தர கழ­க­மட்ட வீரர்கள் இடம் ­பெ­று­வதால் இப்­போட்டி விறு­வி­றுப்­பாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இப்­போட்­டிக்கு முன்­ப­தாக மூன்றாம் இடத்தைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில் கொட்­டாஞ்­சேனை புனித ஆசீர்­வா­தப்பர் கல்­லூ­ரியும் கந்­தானை டி மெஸிநொட் கல்­லூ­ரியும் விளை­யா­ட­வுள்­ளன. 

சம்­பி­ய­னாகும் அணிக்கு ஜனா­தி­பதி கிண்­ணத்­துடன் தங்கப் பதக்­கங்­களும் சான்­றி­தழ்­களும் வழங்­கப்­படும். இரண்டாம், மூன்றாம் இடங்­களைப் பெறும் அணி­க­ளுக்கு கிண்­ணங்­க­ளுடன் வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­க­ளுடன் சான்­றி­தழ்­களும் வழங்­கப்­படும்.

அத்­துடன், விசேட விரு­து­க­ளாக அதி சிறந்த கோல் காப்­பா­ள­ருக்­கான தங்கக் கையுறை, அதிக கோல்­களைப் போட்ட வீர­ருக்­கான தங்கப் பாதணி, இறுதிப் போட்டி நாயகன், சுற்றுப் போட்­டியின் பெறு­ம­தி­வாய்ந்த வீரர் ஆகிய விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

அணிகள் விபரம்

ஹமீத் அல்– ஹுசெய்னி: எம்.எவ்.எம். அமான் (அணித் தலைவர்), எம்.ஏ.ஜே.எம். ரிஷான், எம்.எஸ். சப்றின், எஸ்.கே. அபி­ஷயன், எம்.ஆர்.எம். சஹான், எம்.என். அப்துல் பாசித், அஜித் பிரசாந்த், ரீ.எஸ்.ரீ. நதீர், எஸ்.இஸட்.எம். ஸுல்பார், எம்.எஸ்.எம். குர்ஷித், எம்.எவ்.எம். ஆஷிம், எம்.ஆர்.எம். ரிமாஸ், எம்.என்.எம். ஆதில், அஸ்பர் அஹமத், எம்.என்.எம். நுஸ்கான், அப்துல் அஸீஸ், எம். அஸீம், எம். சப்வான், எம்.என்.எம்.சப்ரான், இஸட்.ஏ.எம். ஆஷிக்.

ஸாஹிரா: எம்.எவ்.எம். ஆக்கிப் (அணித் தலைவர்), எம். முர்ஷித், எம்.இஸட்.ஏ. ஹிமாஷ், எம். ஹம்மாத், எம்.ஷஹீன், எம்.எம்.எம். முஷ்பிர், எச்.ஆர். ராஸா, எம். ஷக்கிர், எம். அக்தார், எம்.எம்.எம். சாஜித், எம். ரஷீத், எஸ். அஹமத், எம்.என்.எம். நசூர்தீன், எம்.எம்.எம். பிர்னாஸ், ரீ.எவ். ஜிப்றி, எவ்.கே.என்.எஸ். அஹமத், எவ்.எம். தலாஹ், எச்.ஆர். ரீஸா, எம்.ஆர்.எம். மஷூத், எம்.ஆர்.எம். ரிப்காதுல்லா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33