ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு முன்னர் பூர்த்தி  செய்­ய­வுள்­ள­தாக இளைஞர் விவ­கார மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

மாத்­தறை ஊறு­பொக்க பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் கட்­சியை மறு­சீ­ர­மைப்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டது என்றார்.

அது குறித்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கும் ,கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் சில­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு  கடந்த மாதம் 23 ஆம் திகதி அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. அதன்­போது கட்­சியின் புதிய தலை­மைத்­துவ சந்­த­தியை உரு­வாக்­கு­வதில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டது.

ஆகவே அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் குழுக்­களும் அமைக்­கப்­பட்­டன. எனவே அக்­கு­ழுக்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கடந்த வெள்­ளிக்­கி­ழ­மையும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரைச் சந்தித்து மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.