பங்களாதேஷ் அணியின் தலைவர் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் 25 வீத அபராதத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை விதித்துள்ளதுடன் இருவருக்கும் ஐ.சி.சி தரப்படுத்தல் புள்ளிகளில் ஒவ்வொன்று கழிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையில் 70 ஆவது சுதந்திரக்கிண்ண முக்கோண இருபதுக்கு -20 தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு அணி வீரர்களுக்கும் இடையில் குழப்பநிலை தோன்றியது.

இதையடுத்து குறித்த குழப்பம் தொடர்பில் ஐ.சி.சி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதன்போது குறித்த இருவரும் ஐ.சி.சி.யின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கட் சபை மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைவர் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோரை ஐ.சி.சி அதிகாரிகள் இன்று காலை சந்தித்த போது குற்றத்தை இருவரும் ஒத்துக்கொண்ட நிலையிலேயே இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டியின் 19.2 ஆவது ஓவரின் போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களை மைதானத்தை விட்டு வருமாறு சைகை காட்டிய குற்றத்திற்காக அணித் தலைவர் ஷகீப் அல் ஹசனிற்கு ஒரு  மறை புள்ளியும் இலங்கை அணித் தலைவர் திஸர பெரேராவுக்கு விரல் நீட்டி பேசிய காரணத்திற்காக நூருல் ஹசனிற்கும் ஒரு மறை புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த போட்டியில் 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி வெற்றிக்களிப்பில் வீரர்கள் ஓய்வறைக்கு சென்ற அவ்வணி வீரர்கள் ஒய்வறையின் கண்ணாடி கதவ நொருக்கி தேதப்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல் கிரிக்கட் உலகையும் கிரிக்கெட் ஆர்வலர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு  இலங்கை - பங்களாதேஷ் போட்டியில் நடந்தது என்ன ? படங்கள் சொல்லும் செய்தி......

                                     சுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை : இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் -                                                    இந்தியா

                                    பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி

                                    பங்களாதேஷ் அணி மீது விசாரணைகளை ஆரம்பித்தது ஐ.சி.சி