சேவையின் அவசியம் கருதி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி வவுனியா தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக இருந்த எஸ்.எம்.சீ.டி.கே.அபேரத்ன எல்பிடிய தலைமையக பொலிஸ் பரிசோதகராக இடமாற்றப்பட்டுள்ளார். 

மேலும், வவுனியா தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக டப்ளியூ.ஏ.சோமரத்னவும், கல்கிஸ்ஸ தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக பீ.ஏ.ஆர்.புஸ்பகுமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், சீ.டப்ளியூ.இத்தமல்கொட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.