ஆயுள் முழுக்க பதவி வகிக்க தேர்வானார் ஜின்பிங்!!!

Published By: Digital Desk 7

17 Mar, 2018 | 12:20 PM
image

சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2 ஆவது முறையாகவும் ஆயுள் முழுக்க பதவி வகிக்கும் வகையில்  அதிபராக  தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

64 வயதான ஜீ ஜின்பிங் சீன அதிபராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில்  2 ஆவது முறையாகவும் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு ஏற்ப அரசியலமைப்பு  விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த ஒக்டோம்பர் மாதம் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஜின்பிங் தேர்வானார்.  இந் நிலையில் ஜின்பிங் மீண்டும் அதிபராக இன்று தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். 

20 இலட்சம் வீரர்கள் கொண்ட வலிமையான இராணுவத்தின் ஒட்டுமொத்த தலைமை பதவியான மத்திய இராணுவ ஆணை தலைவராகவும் ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஜின்பிங்கின்  நெருங்கிய நம்பிக்கைக்கு உரிய 69 வயதான  வாங் கீஷன்  துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த 11ஆம் திகதி  அதிபர் மற்றும் துணை அதிபருக்கான 2 முறை பதவி வகிக்கும் வரம்பு பற்றிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை  சீனா  மேற்கொண்டது. 

இதனை தொடர்ந்தே  அதிபர் மற்றும் துணை அதிபர் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.  இவர்கள் இருவரும் ஆயுள் முழுக்க இந்த பதவியை வகிக்க முடியும்.

அக்கட்சியின் நிறுவனர் தலைவர் மாவோ ஜெடாங் 1949ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு மரணம் அடையும் வரை சீனாவை ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர். 

மாவோ ஜெடாங்கிற்கு  அடுத்து இந்த கௌரவம்  ஜின்பிங்கிற்கு கிடைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47