கிழக்கு மாகாணம் மற்றும் யாழ் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணம் மற்றும் யாழ் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறியளவில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.