பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, ஷமல் ராஜ­பக் ஷ, விமல் வீர­வன்ச, உதய கம்மன்­பில,டலஸ் அழகப் பெரும,மஹிந்த யாப்பா அபே­வர்­தன, சாலிந்த திஸா­நா­யக்க,ரஞ்ஜித் சொய்ஸா,மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே, ஜானக வக்­கும்­புர, தாரக பால­சூ­ரிய, இந்­திக்க அனு­ருத்த, பந்­துல குண­வர்­தன, நிரோஷன் பிரே­ம­ரத்ன, டி.வீ. ஷானக, நாமல் ராஜ­பக் ஷ, பிர­சன்ன ரண­துங்க, சிசிர ஜய­கொடி, பியல் நிஷாந்த உட்­பட இரு­பது பேர் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் நேற்று கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

இதே­வேளை ஏனைய உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களை   பெறு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  மேலும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கையொப்பம் பெறு­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.அத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரும் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தா­கவும் கூட்டு எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் 14 கார­ணிகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. எனவே அதனை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பதவி வகிப்­ப­திலும், அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்று நட­வ­டிக்கை எடுப்­ப­திலும், அவரை பிர­த­ம­ராகக் கொண்­டுள்ள அர­சாங்­கத்­திலும் தமக்கு நம்­பகம் இல்லை என அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­ அடுத்­த­வாரம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டலாம் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை பிர­த­ம­ருக்கு எதி­ரான  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கடந்த வாரம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­ப­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தது. எனினும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அது கடந்த வாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.