சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி இலக்காக 160 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்பட ஒருகட்டத்தில் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் அதிரடியாக விளையாடிய குசல் ஜனித் பேரேராவும் திஸர பெரேராவும் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பங்களாதேஷ் அணி வெற்றிபெற வேண்டுமாயின் 20 ஓவர்களில் 160 ஓட்டங்களைப் பெறவேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் எந்த அணி வெற்றிபெற்று இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் சுதந்திரக் கிண்ணத்திற்காக மோதப்போகின்றதென.