பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.

இலங்கை – இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணிகள் மோதி­வரும் சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது.

இத் தொடரில் இறு­தி­யாக நடை­பெற்ற ஐந்­தா­வது லீக் போட்­டியில் பங்­க­ளா­தேஷை வீழ்த்தி இறு­திக்கு முதல் அணி­யாக முன்­னே­றிய இந்­தி­யா­வுடன் மோதப்­போகும் மற்­றைய அணி எது என்­பதைத் தீர்­மா­னிக்கும் தீர்க்­க­மான போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

3 நாடுகள் பங்­கேற்கும் சுதந்­திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் கொழும்பில் கடந்த 6ஆம் திகதி தொடங்­கி­யது.

இப்­போட்­டியில் ஒவ்­வொரு அணியும் மற்ற அணி­க­ளுடன் தலா 2 முறைமோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்­ளிகள் அடிப்­ப­டையில் முதல் 2 இடங்­களை பிடிக்கும் அணிகள் இறு­திப்­போட்­டிக்கு தகுதி பெறும்.

இந்­திய அணிக்கு ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்­து­விட்­டன. 4 போட்­டி­களில் 3 வெற்றி, 1 தோல்­வி­யுடன் 6 புள்­ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து இறு­திப்­போட்­டிக்கு அவ்வணி முன்­னே­றி­யது.

இந்­திய அணி­யுடன் இறு­திப்­போட்­டியில் மோது­வது இலங்­கையா பங்­க­ளா­தேஷா என்­பது இன்றைய போட்டியில் தெரி­ய­வரும். இதில் வெற்றிபெறும் அணி எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள இறு­திப்­போட்­டிக்கு தகுதிபெறும். 

இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய இரு அணி­க­ளுமே 1 வெற்றி, 2 தோல்­வி­க­ளுடன் 2 புள்­ளிகள் பெற்­றுள்­ளன.

இலங்கை அணி ஏற்­க­னவே பங்­க­ளா­தே­ஷிடம் 214 ஓட்­டங்­களைக் குவித்தும் தோற்­றது. 

இதனால் அதற்கு பதி­லடி கொடுத்து இறு­திப்­போட்­டிக்கு நுழையும் ஆர்­வத்தில் இலங்கை அணி இருக்­கி­றது.

பங்­க­ளாதேஷ் அணி ஏற்­க­னவே இலங்­கையை வீழ்த்தியிருந்­ததால் மீண்டும் தோற்­க­டித்து இறு­திப்­போட்­டிக்குள் நுழைய முடியும் என்ற நம்­பிக்­கையில் உள்­ளது.

இந்­நி­லையில் காயத்தால் முத்­த­ரப்பு தொடரில் பங்­கேற்­காமல் இருந்த பங்­க­ளாதேஷ் அணித் தலைவர், இலங்­கைக்கெதி­ரான கடைசி ஆட்­டத்தில் கள­மி­றங்­கு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பங்­க­ளா­தேஷில் கடந்த மாதம் நடை­பெற்ற பங்­க­ளாதேஷ், இலங்கை, சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் நடை­பெற்­ற­போது ஷகிப் அல் –ஹச­னுக்கு காயமேற்­பட்­டது.

இதனால் இலங்­கைக்ெகதி­ரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஷகிப் அல்–ஹசன் பங்­கேற்­ற­வில்லை. இடது கை விரலில் ஏற்­பட்ட காயத்­திற்­காக வெளி­நாடு சென்று சிகிச்சை மேற்­கொண்டார்.

இந்­நி­லையில் இன்றைய நடை­பெ­ற­வுள்ள போட்டி இரு அணி­க­ளுக்கும் முக்­கி­ய­மான போட்டி என்­பதால் பங்­க­ளாதேஷ் அணி ஷகிப் அல் – ஹசனை அணிக்கு அழைத்­துள்­ளது. 

அதேவேளை இலங்கை அணித் தலைவர் சந்திமால் மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக இரு போட்டிகளில் விளையாடத் தடை பெற்றுள்ளார். அதனால் இன்றைய போட்டிக்கும் திஸரவே தலைமையேற்றுள்ளார்.

இந்நிலையில் அரையிறுதிப் போட்டியாக நடைபெறும் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இறுதிக்குள் நுழையப் போவது இலங்கையா, பங்களாதேஷா என்பதை பொறுத் திருந்து பார்ப் போம்.