ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம  மீளாய்வு குறித்த விவாதம்   இன்றுகாலை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. 

இதனால் குறித்த பகுதியெங்கும் வெறிச்சோடிக்காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை   உத்தியோகத்தர்கள் இன்றைய தினம்  மேற்கொண்ட   பணிப்பகிஷ்கரிப்பு காரணமாகவே  இந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. 

இலங்கை தொடர்பான விவாதம் மட்டுமன்றி இன்றைய தினம் மனித உரிமை பேரவையில் நடைபெறவிருந்த அனைத்து விவாதங்களும்  ரத்து செய்யப்பட்டன. 

எனினும்  பிரிதொரு தினத்தில்  இந்த விவாதங்கள்  நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  இன்றையதினம்  ஏற்கனவே திட்டமிட்டபடி ஜெனிவா வளாகத்தில்   நாடுகளின்  மனித உரிமை நிலைமை தொடர்பான  உபகுழுக்கூட்டங்கள் நடைபெற்றமை  குறிப்பிடத்தக்கது.